சென்னையை அடுத்த வண்டலூர் அருகே வெளிவட்டப்பாதையில் போட்டி போட்டுக் கொண்டு பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களின் பைக் மோதியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே போட்டிப் போட்டுக் கொண்டு இளைஞர்கள் பைக் ரேஸ்
3 இருசக்கர வாகனங்களில் 6 இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதால் நேர்ந்த விபத்து
நவீன் என்ற இளைஞர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழப்பு
ரேஸில் ஈடுபட்ட இளைஞர் நவீன், பக்கவாட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பெண் மீது மோதியதாக தகவல்
பைக் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இளைஞர் நவீனின் பின்னால் அமர்ந்து சென்ற விஷ்வா என்ற இளைஞருக்கு கால் முறிந்தது
விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரணை