ஒரு கிளாஸ் தண்ணீர், ஊறவைத்த பாதாம்… காலையில் வெறும் வயிற்றில் இப்படி சாப்பிட்டுப் பாருங்க!

நமது உணவில் நட்ஸ் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான உணவு முறைகளில் ஒன்று. குறைந்த கொழுப்பு சத்து, வைட்டமின்ஸ், மினரல்ஸ் ஆகியன இருப்பதால் ரத்ததில் உள்ள சக்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும், சத்துக்களை நமது உடலில் விரைவில் உள்ளீர்க்க உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் ஓமேகா -3 ஃபேட்டி ஆசிட் மூட்டு வாதம் வராமல் இருக்க உதவுகிறது. மேலும் மறதியை குறைக்க உதவுகிறது.

பதாம், பிஸ்தா, வால்நட், வேர்கடலை ஆகியவற்றை ஊரவைத்து சாப்பிட்டால் அதில் அதிக நன்மை கிடைக்கும். இதில் வைட்டமின் இ, மெக்னீஷியம், ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை இருக்கிறது..

நட்ஸ் சாப்பிடுவதால் உங்கள் இதயத்திற்கு அதிக நன்மை கிடைக்கும். மேலாக உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும். மேலும் நீரில் ஊரவைக்கும்போது நட்ஸ் செரியாக சீரனமாகும். மேலும் அதில் இருக்கும் நன்மைகளை உடல் உள்வாங்கிக்கொள்ளும்.

காலை வேளையில் நட்ஸ் சாப்பிடுவதுதான் சரியாக இருக்கும். ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு, கை நிறைய ஊரவைத்த நட்ஸ் சாப்பிட்டுவதை வாடிக்கையாக செய்ய வேண்டும். இப்படி செய்தால் நாம் விரைவில் சோர்வாக மாட்டோம். மேலும் நமது மனநிலை நாள் முழுக்க நன்றாக இருக்கும். காலையில் நட்ஸ் சாப்பிட்டால் எடை குறைய வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

8-10 பாதாம் பருப்பு, 3-6 வால்நட் என்று வாரம் 2 முதல் 3 நாட்கள் வரை சாப்பிடலாம். சில வாரம் கைநிறைய பிஸ்தா சாப்பிடலாம். மேலும் சில நாட்கள் 4 முதல் 5 முந்திரி சாப்பிடலாம்.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.