திருவண்ணாமலையில் ஓ பன்னீர் செல்வத்தின் பெயரும், படமும் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் ஒரு கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் இருந்து ஆரணிக்கு செல்கின்றார். சேலம் டூ ஆரணிக்கு, திருவண்ணாமலை வழியாக அவர் செல்ல இருக்கிறார்.

இடையே திருவண்ணாமலை மற்றும் சில இடங்களில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு இருந்த போஸ்டரில் `ஒற்றை தலைமையே வருக’ என்று பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க… மழை Vs இந்தியா Vs தென்னாப்பிரிக்கா.. இன்று வெற்றி யாருக்கு? #T20

இந்த போஸ்டரில் பன்னீர்செல்வத்தின் படமோ பெயரோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போஸ்டர் வைத்தவர் மண்ணெண்ணெய் மாணிக்கம் என்ற ஒரு அதிமுக தொண்டர். அவருக்கு தனியான ஒரு பதவியோ கட்சிப் பொறுப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM