கேரளாவில் தன்னை பட்டாக்கத்தியால் தாக்கவந்த நபரை, போலீஸ் அதிகாரி தைரியத்துடன் தடுத்து மடக்கிபிடித்த வீடியோ இணையத்தில் பலரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.
காவல்துறை அதிகாரி விஜயகுமார் ஐபிஎஸ் சற்று நேரத்திற்கு முன்பு வீடியோ ஒன்றினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கேரளாவில் நடந்த சம்பவம் அது என்பது மட்டும் அவர் பதிவிலிருந்து தெரியவருகிறது. அந்த வீடியோவில், நீலநிற சட்டை அணிந்த நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்துகொண்டு யாரையோ எதிர்பார்த்து நிற்கிறார்.
அப்போது பொலிரோ போலீஸ் வாகனம் அந்த நபரின் வாகனம் செல்லாதவாறு சாலையில் தடுத்து நிற்கிறது. உள்ளேயிருந்து இறங்கிய போலீஸை கண்டதும் நீலச்சட்டை நபர் தனது வாகனத்தில் வைத்திருந்த பட்டாகத்தியை எடுத்து தாக்க முற்படுகிறார். நிலைமையை சுதாரித்துக்கொண்ட போலீஸும், அவனை கீழே தள்ளி மடக்கிப்பிடித்து கத்தியையும் அந்த நபரிடமிருந்து பிடுங்கிவிடுகிறார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் அந்த நபரை அடித்து காவல் வாகனத்தில் ஏற்றிகொண்டுசெல்ல உதவுகின்றனர்.
kudos to the brave police officer.
In the service of the Society/ Nation.
#Police #Courage #Kerala pic.twitter.com/kIiE1uAVex
— Vijayakumar IPS (@vijaypnpa_ips) June 17, 2022
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஐபிஎஸ் விஜயகுமார், ’’துணிச்சலான காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள். சமூகம்/ தேசத்தின் சேவையில்’’ என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருவதுடன் காவல்துறைக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM