டோனி சொன்னாக… கோலி சொன்னாக… இப்போ ரோகித் சர்மாவும் அதையே சொல்றாக!

Cricket News in tamil: முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்று ஃபார்மெட்டுகளிலும் சதமடித்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாககியுள்ளது. இதனால் ஆடும் லெவனில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருவது குறித்து பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி கருத்து தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் சமீபத்தில், ஃபார்மில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இந்திய அணி நிர்வாகம் மோசமான முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வீரர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், விராட் கோலிக்கு இந்திய அணி தொடர்ச்சியான வாய்ப்பு வழங்குவதை கடுமையாக தாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“ஒரு காலத்தில் நீங்கள் ஃபார்மில் இல்லை, நற்பெயரைப் பொருட்படுத்தாமல் நீங்கள் கைவிடப்படுவீர்கள். சௌரவ், சேவாக், யுவராஜ், ஜாகீர், பாஜி ஆகியோர் ஃபார்மில் இல்லாத போது நீக்கப்பட்டுள்ளனர். மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு சென்று ரன்களை குவித்து மீண்டும் மறுபிரவேசம் செய்துள்ளனர்.

இப்போது கடுமையாக மாறிவிட்டது, அங்கு ஃபார்ம் இல்லாததற்கு ஓய்வு இருக்கிறது. இது முன்னேற்றத்திற்கு வழி இல்லை. நாட்டில் எத்தனையோ திறமைகள் இருந்தும், நற்பெயரை வைத்து விளையாட முடியாது. இந்தியாவின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவரான அனில் கும்ப்ளே பல முறை பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அணியின் பெரிய நன்மைக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அந்த பதிவில் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையில், முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மற்றொரு தோல்வியாக, நேற்றுடன் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2ல் களமாடி வெறும் 12 (1, 11) ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இங்கிலாந்து எதிரான 3வது டி-20 இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அணியின் தோல்வி ஒரு புறம், கோலியின் ஃபார்ம் குறித்த விவகாரம் ஒருபுறம் என கேப்டன் ரோகித்தை பத்திரிக்கையாளர்கள் தங்கள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

ஆனாலும் அவர்களை சமாளித்த இந்திய கேப்டன் ரோகித், கோலியின் ஃபார்மை பாதுகாப்பது மட்டுமல்லாமல், விளையாடும் லெவன் அணியில் கோலியின் இடத்தை கேள்விக்குள்ளாக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் விமர்சித்தார்.

“நாங்கள் வெளிப்புறத்தில் இருந்து வரும் சத்தத்தை அதிகம் கேட்பதில்லை (அவுட்சைட் நாயிஸ்). இந்த நிபுணர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் ஏன் நிபுணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. அவர்கள் வெளியில் இருந்து விளையாட்டைப் பார்க்கிறார்கள், டிரஸ்ஸிங் அறையில் உள்ளே என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது.

ஒரு அணியை எடுப்பதில் எப்போதும் ஒரு சிந்தனை செயல்முறை உள்ளது. நாங்கள் எங்கள் வீரர்களுக்கு உறுதுணையாக இருக்க முயற்சிக்கிறோம். வெளியில் இருந்து விளையாட்டைப் பார்க்கும் மக்களுக்கு இது பற்றி தெரியாது.” என்று சாட்டை விளாசினார்.

இப்படி, பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்விகளை எதிர்கொள்ளும் ஒரு இந்திய கேப்டன் ‘அவுட்சைட் நாயிஸ்’ என்ற வார்த்தை குறிப்பிடுவது இது முதல் முறையல்ல. இது முன்பு இதுபோல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடங்கி வைத்தவர் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி தான்.

2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதைத் தொடர்ந்து எம்எஸ் தோனி, “நான் எவ்வளவு சிறந்தவன் என்பதை யாரையும் நிரூபிக்க நான் இங்கு வரவில்லை.” என்று கூறி தன் மீதும், அணியினரின் மீதும் சுமத்தப்பட்ட விமர்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு தோனி தனது விமர்சகர்களின் வாயை மூட பல சந்தர்ப்பங்களில் இதே போன்ற வரிகளைப் பயன்படுத்தினார்.

அவருக்குப் பின் வந்த விராட் கோலியும், தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இதே வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, போட்டிக்கு முந்தைய உரையாடலில் கலந்து கொண்ட கோலி, தனக்கு எண்களைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்றும், யாரிடமும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என்றும் கூறி இருந்தார்.

“நிலைமையின் உண்மை என்னவென்றால், நீங்கள் இறுதியில் அணிக்காக தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள், அதைச் செய்வதே எனது சிறந்த முயற்சி, மேலும் நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.” என்று தெரிவித்து இருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் , கோலி அஜிங்க்யா ரஹானேவுக்கு ஆதரவாக பேசினார். மேலும் ரஹானேவின் மோசமான ஆட்டம் குறித்து வெளிப்புறத்தில் இருந்து வரும் சத்தத்தை அதிகம் கேட்பதில்லை (அவுட்சைட் நாயிஸ்) என்றும் கூறியிருந்தார்.

“ஒரு அணியாக நாங்கள் அதைப் பொழுதுபோக்க மாட்டோம், ஏனென்றால் இந்த சமநிலையை வெளியில் எதிர்பார்க்க முடியாது, அங்கு ஒருவரைப் பற்றி புகழ் பாடுபவர்கள் திடீரென்று குறிப்பிட்ட நபர் வெளியேற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்த நிலையை அடைவதற்கும், அத்தகைய நேர்மறையான மனநிலையில் இருப்பதற்கும் எவ்வளவு கடின உழைப்பு தேவை என்பதை நாங்கள் அறிந்திருப்பதால், இதுபோன்ற கருத்துகளுக்கு நாங்கள் எதிர்வினையாற்றுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட வீரர் அஜிங்க்யாவாக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்” என்று கோலி கூறியிருந்தார்.

இந்த ‘அவுட்சைட் நாயிஸ்’ என்ற சொற்றொடர் மற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் பிடித்து போயுள்ளது. டாப்-ஆர்டர் பேட்டர், கே.எல்.ராகுல் தனது வித்தியாசமான கொண்டாட்டத்துடன் கண்களை மூடிக்கொண்டும், காதுகளை அடைத்துக் கொண்டும் வந்துள்ளார்.

“இந்த (கொண்டாட்டம்) சத்தத்தை அணைப்பதற்காகவே, யாரையும் அவமதிப்பதற்காக அல்ல. உங்களை கீழே இழுக்க முயற்சிக்கும் நபர்கள் அங்கே இருக்கிறார்கள், சில நேரங்களில் நீங்கள் அவர்களை புறக்கணிக்க வேண்டும். எனவே அந்த சத்தத்தை அணைக்க இது ஒரு செய்தி மட்டுமே, ”என்று ராகுல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் சேதேஷ்வர் புஜாரா, ரஹானேவின் ஃபார்ம் பற்றி கேட்கப்பட்ட பிறகு, ‘அவுட்சைட் நாயிஸ்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார் ராகுல்.

“சரி, அணி நிர்வாகம் எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறது, எனவே இது ட்சைட் நாயிஸ்’ என்று நான் கூறுவேன். ஜோகன்னஸ்பர்க்கில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில், பயிற்சியாளர்கள், கேப்டன், அனைவரும் அனைத்து வீரர்களுக்கும் பின்னால் உள்ளனர், நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். ரஹானே மற்றும் புஜாரா மூன்றாவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தனர்.

நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்டின் போது இந்தியாவின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஷ்வின், தான் இப்போது சிறிது காலம் எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்தேன் வருவதாகவும், ‘அவுட்சைட் நாயிஸ்’ அணைப்பதில் சிறந்து விளங்குவதாகவும் கூறியிருந்தார்.

“என்னால் விஷயங்களைப் பிடிக்க முடியாது. நான் இப்போது சிறிது காலம் எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்தேன். என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்தான் என் வாழ்க்கையின் நோக்கம். நான் இதுவரை செய்ததை விட வெளியில் இருந்து வரும் சத்தத்தை நன்றாக அணைக்கும் கட்டத்தில் இருக்கிறேன்” என்று அஸ்வின் கூறியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.