பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்ச அரசியல் வம்சமே காரணம் – மக்கள் ஆதங்கம்


நாட்டின் மிக சக்திவாய்ந்த கட்டிடங்களில் ஒன்றான உத்தியோகபூர்வ ஜனாதிபதி இல்லத்தை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலில் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் வரிசைகள் நீண்டுள்ளது. உள்ளே நுழைவதற்கு ஆறு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பதாக சிலர் தெரிவித்துள்ளதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்ச அரசியல் வம்சமே காரணம் - மக்கள் ஆதங்கம் | Protesters Ridding Sri Lanka Of The Rajapaksa

இது குறித்து ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதியின் இல்லம் மக்களின் அரண்மனையாக மாறிவிட்டது, அவர்கள் தருணத்தில் மகிழ்கிறார்கள். நீச்சல் குளத்தைச் சுற்றிலும் கூட்டம் அலைமோதுகிறது.

அத்துடன், பெரிய சரவிளக்கு, வசதியான படுக்கைகள் மற்றும் பெருமதி வாய்ந்த தளவாடங்களை பார்வையிடுவதற்காக மாளிகையின் இரண்டாவது மாடிக்கு மக்கள் படிக்கட்டில் ஏறி செல்கின்றனர்.

சீனாவிலிருந்து பெரும் கடன்களைப் பெற்ற ராஜபக்சவினர்

இதன்போது நாம் நிரஞ்சி பெரேனாவை சந்தித்து பேசினோம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகளை அழைத்துக்கொண்டு ஜனாதிபதி மாளிகைக்கு வந்துள்ளார்.

சாதாரண இலங்கையர்கள் கஷ்டப்படும் வேளையில் இங்குள்ள வீண்விரயம் மற்றும் செலவுகளைக் கண்டு வெறுப்படைவதாக அவர் ஸ்கை நியூஸிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்ச அரசியல் வம்சமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்ச அரசியல் வம்சமே காரணம் - மக்கள் ஆதங்கம் | Protesters Ridding Sri Lanka Of The Rajapaksa

அவர்கள் நம் நாட்டை சரிசெய்ய முடியாத அளவுக்கு அழித்துவிட்டனர் என்று அவர் கூறினார்.

நாங்கள் ஆரம்பத்தில் அவர்களுக்கு வாக்களித்தோம், ஆனால் அவர்கள் சீனாவிலிருந்து பெரும் கடன்களைப் பெற்றனர், அவற்றை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பது பற்றி அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

இப்போது எரிபொருள் வாங்க முடியாத நிலையில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், இரண்டு மைல் தூரம் நடந்தே ஜனாதிபதியின் இல்லத்திற்கு வந்ததாக கூறியுள்ளார்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.