மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின், மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 30ம் தேதி அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த கட்டுமான பணியில் ஈடுப்பட்ட பணியாளர்கள், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் நிலச்சரிவில் சிக்கினர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதற்கிடையில், அங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணியில் மூன்று பேரின் உடல்களை காவல்துறையினர் மீட்டனர். இதனால், இதுவரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாயமான எட்டு பேரை தேடி வருவதாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.