“தி கிரே மேன்” ஹாலிவுட் திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சி.. செய்தியாளர் கேள்விக்கு நகைச்சுவையாக பதில் அளித்த தனுஷ்..!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற The Gray Man ஹாலிவுட் திரைப்பட promotion-ல் பங்கேற்ற நடிகர் தனுஷ், செய்தியாளர் கேள்விக்கு நகைச்சுவையாக பதில் அளித்தார்.

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் போன்ற வெற்றி படங்களை இயக்கிய ருஸ்ஸோ சகோதரர்கள், The Gray Man என்ற ஆக்ஷன் திரில்லரை இயக்கி உள்ளனர்.

Chris Evans, Ryan Gosling ஆகிய முன்னனி ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் இத்திரைப்படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த திரைப்படத்தில் நடிக்க தன்னை எப்படி தேர்வு செய்தார்கள் எனத் தெரியவில்லை எனத் தெரிவித்த தனுஷ், படத்தில் நடிப்பதற்காகத் தன்னை அனுகிய கேஸ்டிங் டைரக்டரை போல் மிமிக்ரி செய்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.