நியூயார்க்,-அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்ப் படுகாயம் அடைந்ததால் இறந்தார் என, மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஹாட்டன் நகரில் உள்ள வீட்டில், இரு தினங்களுக்கு முன் படுகாயம் அடைந்த நிலையில் இவானா டிரம்ப் இறந்து கிடந்தார். அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகிஉள்ளது. அதில், ‘உடலில் ஏற்பட்ட படுகாயங்களால், இவானா டிரம்ப் இறந்துள்ளார்; இதில் குற்றப் பின்னணிக்கு ஆதாரம் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. செக் குடியரசை சேர்ந்த மாடல் அழகியான இவானா, 1977ல் ரியல் எஸ்டேட் அதிபரான டொனால்டு டிரம்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு டொனால்டு ஜூனியர், இவானா, எரிக் என மூன்று குழந்தைகள் பிறந்தனர். நியூயார்க்கின் பெருங்கோடீஸ்வர தம்பதியாக, ஆடம்பர வாழ்க்கை நடத்தினர். இவானா ஜவுளி, நகை, அழகுப் பொருட்கள் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார்; பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
டொனால்டு டிரம்பை திருமணம் செய்வதற்கு முன் ஒரு முறை, டிரம்பை பிரிந்த பின் இரு முறை என, நான்கு முறை திருமணம் செய்தவர் இவானா. அவர் மறைவு குறித்து டொனால்டு டிரம்ப் கூறும்போது, ”அற்புதமான, அழகான பெண்மணியான இவானா, உத்வேகமான வாழ்க்கையை நடத்தி, தனக்கு பெருமை சேர்க்கும் வகையில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத் தார்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement