
ஒய் சேலஞ்ச்சை ஏற்ற ஸ்ருதி
சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு சவாலை செய்து அதை டிரெண்ட் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் பிரபலங்கள். கிரீன் இந்தியா சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அந்தவகையில் லேட்டஸ்ட் சவால் ‛ஒய் சேலஞ்ச்'. சுவற்றில் ஒரு காலை வைத்து தலைகீழாக மற்றொரு காலை நீட்டி ஒய் போன்று வடிவத்தை கொண்டு வருவது. இந்த சவால் இந்திய திரையுலகினர் மத்தியில் வைரலாகி வருகிறது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகைகள் இந்த சாவலை செய்து வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இந்த சவாலை ஏற்று வீடியோவாக வெளியிட்டார். மலைகா அரோரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல நடிகைகளும் இந்த சவாலை ஏற்று அதை வீடியோவாக தங்களது சமூகவலைதளத்தில் பதிவேற்றி உள்ளனர்.