தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் எஸ்.சி., எஸ்.டி. பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதா உள்ளிட்ட 24 மசோதாக்கள் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மக்களவைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், புதிய மசோதாக்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் திருத்த மசோதா, குடும்ப நீதிமன்றங்கள் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.