வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர் :”நாட்டில் உள்ள சிறை கைதிகளில், 80 சதவீதம் பேர் விசாரணை கைதிகள்,” என தலைமை நீதிபதி என்.வி.ரமணா குறிப்பிட்டார்.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் 18வது அகில இந்திய சட்ட சேவைகள் ஆணையத்தின் துவக்க விழா நடந்தது.
இதற்கு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:நாட்டில் உள்ள ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறை கைதிகளில் 80 சதவீதம் பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர். குற்றவியல் நீதி அமைப்பில், தவறுக்கு தண்டனை அளிப்பது தான் முறை.
![]() |
ஆனால், கண்மூடித்தனமான கைது, ஜாமின் பெறுவதில் உள்ள சிக்கல் போன்றவற்றால் விசாரணை கைதிகள் நீண்ட காலமாக சிறையில் உள்ளனர். இது குறித்து நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். மேலும், குற்றவியல் நீதி அமைப்பின் செயல்பாடுகளை மேம்படுத்த, முழுமையான செயல் திட்டம் தேவை. எந்த விசாரணையும் இன்றி, அதிக எண்ணிக்கையிலானோர் நீண்ட காலமாக சிறையில் இருப்பது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement