மாஸ் காட்டும் 'கடுவா' : பிரியமுடன் பிரித்திவிராஜ்

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து நடிப்பில் முத்திரை பதித்து மீண்டும் மலையாளத்தில் பிஸி நடிகராக கலக்கி 'கடுவா' என்ற ஆக் ஷன், மாஸ் படத்தில் தெறிக்கவிடும் இயக்குனர், நடிகர் பிரித்திவிராஜ் மனம் திறக்கிறார்.

ஐயப்பனும் கோஷியும், ஜனகன மன, கடுவா என வரிசையாக வெற்றிப்படங்கள் தருகிறீர்களே
என் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவது சந்தோஷம். கடுவா (புலி) புத்துணர்ச்சி தரும் படமாக அமைந்தது. சமூகத்திற்கு தேவையான, கதைகள் மலையாளத்தில் வருகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு மாஸ், படம் நடித்துள்ளேன்.

கடுவா எந்த காலகட்ட கதை

1990ல் கோட்டயம் அருகே பாலா என்ற இடத்தில் நடந்த உண்மை சம்பவம் தான் 'கடுவா' கதை. படத்தோட ஸ்டைலில் ஒரு பீரியட் படம் மாதிரி நாயகனின் மீசை, மலையாளிகளுக்கே உரிய வேட்டி என எல்லாமே 1990ல் நடந்ததை கண்முன் கொண்டுவரும்.

இயக்குனர் ஷாஜி கைலாஷ் நிறைய ஹிட் தந்தவராச்சே…

2009ல் அவரிடம் பேசும் போது அவர் சினிமாவை விட்டு தள்ளி இருந்தார். நீங்க முதல்ல ஸ்கிரிப்ட் படிங்க; பின் கூறுங்கள் படம் பண்ணலாம் என கூறினேன். கதையை படித்த பின்நான் இயக்குகிறேன் என்றார். இது ஷாஜி கைலாஷின் மாஸ் படமாக வந்திருக்கு

சொந்தமாக படங்கள் தயாரிப்பது குறித்து
பிரித்திவிராஜ் புரடக்சன் சார்பில் டிரைவிங் லைசென்ஸ் படம் எடுத்தோம். பெரிய ஹிட் ஆச்சு. அந்த வெற்றிக்கு பின் 'ஜனகனமன', 'கடுவா', 'கோல்ட்' படங்கள் எடுக்கிறோம். அடுத்து ஹிந்தி படம். படப்பிடிப்பு முடிந்துள்ளது, அக் ஷய் குமார் நடித்துள்ளர்.

அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் உடன்
நான் ஹீரோக்களுக்கு படம் பண்ணும் இயக்குனர் இல்லை. ஒரு கதை எழுதிய பின் யாரை வைத்து ஆரம்பிக்கலாம் என முடிவு செய்வேன். கதைக்கு யார் பொருத்தமோ அவரிடம் பேசுவேன். நடிகருக்கு கதை பிடித்தால் ஓகே.

தமிழ் படங்களில் ஏன் இவ்வளவு இடைவெளி

நல்ல கதைகள் எனக்கு வரவில்லை என்பது தான் உண்மை. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து நேரத்தை ஒதுக்கி, கதை பண்ணும் அளவுக்கு சந்தோஷப்படுத்தும் கதைகள் தேடி வருவதற்காக காத்திருக்கிறேன்.

மலையாள சினிமாவில் ஒரிஜினலான கதைகள்
நீங்கள் கேட்பது நல்ல மலையாள படங்கள் குறித்து … மோசமான படங்கள் செய்தியில் வருவது இல்லை. சில கதைகள் ஒரிஜினலாக வரும் போது சந்தோஷம் தான். நிறைய பெரிய எழுத்தாளர்கள், படைப்பாளிகள் நடிக்கிறார்கள். சமீபத்தில் மலையாள சினிமாக்கள் அதிகம் கவனிக்கப்படுகிறது.

நேரிலும், படத்திலும் வித்தியாசமாக தெரியுகிறீர்களே
நான் அவ்வளவு மென்மையான ஆள் இல்லை. என் படங்கள் இப்படி தான் இருக்கும் என யாரும் முடிவு செய்துவிட கூடாது, ஜனகன மன, ப்ரோடாடி, கடுவா, கோல்ட் படங்களில் வித்தியாசமான கேரக்டர்கள் தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.