நடிகர் சூர்யா நடித்து பிரபலமான “24” படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் தெரிவித்துள்ளார். 2016- ஆம் ஆண்டு சூர்யா நடித்திருந்த 24 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் ஆத்ரேயா என்ற வில்லன் கெட்டப்பில் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், ஆத்ரேயா கதாபாத்திரத்தை வைத்து 24 படத்தின் 2-ஆம் பாகம் உருவாக இருப்பதாக இயக்குநர் விக்ரம் குமார் தெரிவித்துள்ளார். சூர்யா தனது சினிமா வாழ்க்கையில் நடித்த எதிர்மறை கதாபாத்திரங்களில் ஒன்றான ஆத்ரேயாவை மீண்டும் இயக்கப்போவதாகவும் ஆத்ரேயாவின் முழுமையாக விரிவாக்கப்பட வேண்டிய ஒரு கதை தயாராக உள்ளது என்று அவஎ தெரிவித்துள்ளார். இதனால் லோகேஷ் கனகராஜின் “விக்ரம்”படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா அதிரடி காட்டவுள்ளார்.
