லண்டனில் இந்திய வம்சாவளி நகைச்சுவை நடிகர் மீது ரவுடிகள் தாக்குதல்!


இந்திய வம்சாவளி நகைச்சுவை நடிகர் பால் சௌத்ரி லண்டனில் குண்டர்களால் தாக்கப்பட்டார்.

மத்திய லண்டனில் காரில் இருந்த போது தான் தாக்கப்பட்டதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆங்கில நகைச்சுவை நடிகர் பால் சௌத்ரி கூறியுள்ளார்.

லண்டனில் பிறந்தவர் இந்திய பஞ்சாபி சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்த 47 வயதான நகைச்சுவை நடிகர் பால் சௌத்ரி. அவரது உண்மையான பெயர் தாஜ்பால் சிங் சவுத்ரி. இங்கிலாந்தில் பல இடங்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை அவர் நடத்தியுள்ளார். மேலும், சில படங்களில் நடுத்துள்ள அவர், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், தொகுப்பாளராகவும், சிறப்பு விருந்தினராகவும் இருந்துள்ளார்.

லண்டனில் இந்திய வம்சாவளி நகைச்சுவை நடிகர் மீது ரவுடிகள் தாக்குதல்! | London Indian Origin Comedian Paul Chowdhry Attack Image: Shutterstock/Getty Images

அவர் சம்பவம் நடந்தபோது தலைநகரில் உள்ள நியூ ஆக்ஸ்போர்டு தெருவில் தனது காரில் இருந்ததாகக் கூறினார்.

பால், தான் தாக்குதலுக்கு ஆளானதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஞாயிற்றுகிழமை உறுதிப்படுத்தினார். அவர் தனது பதிவில், “நேற்று லண்டனில் எனது காரில் நான் தாக்கப்பட்டேன், நான் நன்றாக இருக்கிறேன், என்னால் முடிந்தவரை உங்களுக்கு நிலைமையை புதுப்பிப்பேன்” என்று கூறினார்.

இந்நிலையில், பால் சௌத்ரியின் ரசிகர்கள் மற்றும் நலம்விரும்பிகள் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். அவர் இதுபோன்று குண்டர்களால் தாக்கப்படுவது முதல்முறையல்ல.

லண்டனில் இந்திய வம்சாவளி நகைச்சுவை நடிகர் மீது ரவுடிகள் தாக்குதல்! | London Indian Origin Comedian Paul Chowdhry Attack Image: Shutterstock



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.