இங்கிலாந்து: இந்திய அணிக்கு 260 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து 259 ரன்களை குவித்தது. பின்னர் 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து 3 ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற செட் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
