இந்தியா அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று. அது சமையல் எண்ணெய் ஆக இருந்தாலும் சரி, எரிபொருளாக இருந்தாலும் சரி.
உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு பிறகு சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, சமையல் எண்ணெய் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டது.
குறிப்பாக சன்பிளவர் ஆயில் இறக்குமதியானது முற்றிலும் தடைபட்டு போனது. இதற்கிடையில் அந்த சமயத்தில் பாமாயில் முக்கிய இறக்குமதியாளராக இருக்கும் இந்தோனேஷியாவும் தடை செய்தது.
தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு.. ஏன் தெரியுமா..?!

விலை குறையலாம்
இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலையானது மிக மோசமான ஏற்றத்தினை கண்டது. இதற்கிடையில் இந்தியா இறக்குமதி வரியினை குறைத்தது. இந்த நிலையில் இந்தோனேஷியாவும் ஏற்றுமதியினை அதிகரிக்க ஏற்றுமதி வரியினை ஆகஸ்ட் வரையில் விலக்கு அளித்துள்ளது. இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அதானியின் அதிரடி முடிவு
அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி விலமர் நிறுவனம் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலை 30 ரூபாயினை குறைப்பதாக தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் இந்த நடவடிக்கையானது இந்தோனேஷியா அரசு ஏற்றுமதி வரியினை தள்ளுபடி செய்துள்ள நிலையில் வந்துள்ளது.

விரைவில் விலை குறையலாம்
இந்தோனேஷியா அரசின் அறிவிப்பினால் விரைவில் பாமாயில் விலை குறைந்து இறக்குமதி செய்யப்படலாம். இது உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறைய வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் அதானி இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பினை கொடுத்துள்ளது.

ஃபார்ச்சூன் விலை குறைப்பு?
அதானி வில்மர் நிறுவனம் ஃபார்ச்சூன் பிராண்டின் கீழ் சமையல் எண்ணெய் விற்பனை செய்து வருகின்றது. இதன் விலை ஒரு லிட்டருக்கு 195 ரூபாயாக இருந்த நிலையில், இது 165 ரூபாயாக குறையலாம்.
இதே சன்பிளவர் ஆயில் விலை லிட்டருக்கு 210 ரூபாயில் இருந்து, 199 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதே கடுகு எண்ணெய் விலை அதிகபட்ச விலை 195 ரூபாயில் இருந்து, 190 ரூபாயாக குறைந்துள்ளது.

மற்ற எண்ணெய் விலை எவ்வளவு?
பார்ச்சூன் ரைஸ் பிராண்ட் எண்ணெய் விலை லிட்டருக்கு 225 ரூபாயில் இருந்து, 210 ரூபாயாகவும், கடலை எண்ணெய் விலை 220 ரூபாயில் இருந்து, 210 ரூபாயாகவும், ராக் வனஸ்பதியின் விலை 200 ரூபாயில் இருந்து 185 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ராக் பாமேலின் எண்ணெய் விலை விலை லிட்டருக்கு 170 ரூபாயில் இருந்து, 144 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

விரைவில் விலை குறையலாம்
இது குறித்து அதானி வில்மர், சர்வதேச அளவில் எண்ணெய் விலை குறைந்துள்ளது. அதன் பலனை நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளோம். ஆக புதிய விலையுடன் கூடிய பங்குகள் விரைவில் சந்தைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Adani wilmar reduces edible oil prices by Rs.30 per litre: check latest rates here
adani wilmar reduces edible oil prices by Rs.30 per litre: check latest rates here/அதானி எடுத்த அதிரடி முடிவு.. சாமானிய மக்கள் செம ஹேப்பி.. ஏன் தெரியுமா?