உத்தரப்பிரதேசம்: குப்பை வண்டியில் பிரதமர், முதல்வர் படங்கள்… ஒப்பந்தத் தொழிலாளி பணிநீக்கம்

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவின் மதுரா நகர், நிகாமில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்றுள்ளார். இதை சிலர் வீடியோ பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில், இது தொடர்பாகக் குப்பை வண்டியில் அரசியல் தலைவர் படங்களை எடுத்துச்சென்ற ஒப்பந்தத் தொழிலாளி, “இந்தியத் தலைவர்களின் படங்களைக் குப்பையில் கிடப்பதைப் பார்த்தேன். அதனால் அதை நான் எடுத்துச் சென்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், அந்த ஒப்பந்த தொழிலாளி பணிநீக்கம் செய்து அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அந்த ஊழியரை வீடியோ பிடித்து சமூக வலைதளக்களில் பதிவிட்டவர்கள், “அதில் இருந்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்களை, அதன்பின்னர் நாங்கள் எடுத்துச்சென்றோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, மதுரா-பிருந்தாவனின் கூடுதல் நகராட்சி ஆணையர் சத்யேந்திர குமார் திவாரி, “அந்த ஊழியர் தவறுதலாக அரசியல் தலைவர்களின் படங்களைக் குப்பை வண்டியில் எடுத்துச் சென்றுள்ளார். இது திட்டமிட்டு நடந்ததல்ல” என விளக்கமளித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.