பெங்களூர் பெண்ணின் வழக்கில் எஸ்பிஐ தோல்வி.. 54.09 லட்சம் கடன் தள்ளுபடி.. 1 லட்சம் நஷ்டஈடு..!

தாரணி மற்றும் ரூபேஷ் ரெட்டி ஜோடி எஸ்பிஐ வங்கியில் ஹோம் லோன் வாங்கும் போது விண்ணப்பத்தில் இன்சூரன்ஸ் கவரேஜ்-ஐ தேர்வு செய்யும் செக் பாக்ஸ்-ஐ டிக் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஜோடி “SBI Life-RiNn Raksha” திட்டத்தின் கீழ் ஹோம் லோன் இன்சூரன்ஸ் கவரேஜ் தேர்வு செய்துள்ளது.

ஆனால் வங்கிகள் இதை முறையாகப் பிராசஸ் செய்யாமல் இருந்துள்ளது. இந்நிலையில் ரூபேஷ் ரெட்டி மரணம் அடைந்த நிலையில் எஸ்பிஐ இன்சூரன்ஸ் கவரேஜ் செய்யப்படவில்லை எனவும், அதற்கான பணத்தைக் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

இதை எதிர்த்து தாரணி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

5 நாளில் ரூ.9.76 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

தாரணி மற்றும் ரூபேஷ் ரெட்டி ஜோடி

தாரணி மற்றும் ரூபேஷ் ரெட்டி ஜோடி

தாரணியின் கணவர் ரூபேஷ் ரெட்டி காலமானதை அடுத்து மே 20, 2021 அன்று நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். மேலும் தன்னுடன் தனது மைனர் குழந்தைகள், பெற்றோர்கள், குடும்பம் தன்னை நம்பியிருக்கும் நிலையில் கடனை செலுத்த முடியவில்லை என்று அவர் கூறினார்.

தாரணி வழக்கு

தாரணி வழக்கு

மேலும் இந்த இன்சூரன்ஸ் தொகையை நம்பிதான் தனது வாழ்க்கையைக் கட்டமைக்க வேண்டும் என்பதாக வழக்கில் தெரிவித்தார் தாரணி. ஹோம் லோனுக்கான அனைத்து ஈஎம்ஐகளையும் வட்டியுடன் கட்டி வரும் வேளையில் வங்கி ஊழியர்களின் தவறுகள் மற்றும் மெத்தனப் போக்குக் காரணமாக இவர்களுக்கு இன்சூரன்ஸ் கவர் கிடைக்காமல் உள்ளது.

இன்சூரன்ஸ் கவரேஜ்
 

இன்சூரன்ஸ் கவரேஜ்

இந்த வழக்கின் விசாரணையின் போது எஸ்பிஐ வங்கியின் இன்சூரன்ஸ் கவரேஜ் பணிகளை எஸ்ஐபி லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் அளிக்கிறது. மேலும் முறையான அங்கிகாரம் அளிக்கப்படவில்லை, இதேபோல் தாரணி மற்றும் ரூபேஷ் ரெட்டி ஜோடி இந்த இன்சூரன்ஸ் கவரேஜ்-க்காக எவ்விதமான ப்ரீமியம் தொகையும் எஸ்ஐபி லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குச் செலுத்தவில்லை என வாதிட்டு உள்ளது.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

மேலும் எஸ்பிஐ வங்கி ரூபேஷ் ரெட்டி ப்ரீமியம் செலுத்தா நிலையில் கடனாளியின் உயிர் இன்சூர் செய்யப்படவில்லை, இதனால் இன்சூரன்ஸ் கவரேஜ் அளிக்க முடியது எனவும் வாதிட்டு உள்ளது. ஆனால் நீதிமன்றம் வங்கியின் வாதத்தை ஏற்க மறுத்தது. இதனால் தாரணி இவ்வழக்கில் வெற்றிப் பெற்றார்.

54.09 லட்சம் கடன் தள்ளுபடி

54.09 லட்சம் கடன் தள்ளுபடி

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) எதிராகப் பெங்களூரு பெண்ணின் சட்டப் போராட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் அப்பெண்ணின் 54.09 லட்சம் கடனை தள்ளுபடி செய்யுமாறு நுகர்வோர் நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டு உள்ளது.

1 லட்சம் ரூபாய் இழப்பீடு

1 லட்சம் ரூபாய் இழப்பீடு

பெங்களூரு நகர்ப்புற இரண்டாவது கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தால் புகார்தாரர் டி.தாரணிக்கு 54.09 லட்சம் கடனை தள்ளுபடி செய்துள்ளது மட்டும் அல்லாமல் 1 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் 20,000 ரூபாயை வழக்குச் செலவுக்காக எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

குறைபாடு மற்றும் நியாயமற்ற நடைமுறை

குறைபாடு மற்றும் நியாயமற்ற நடைமுறை

36 வயதான தாரணி, வங்கியின் அலட்சியத்தால் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக நுகர்வோர் நீதிமன்றம் குறிப்பிட்டது. இது SBI, வைட்ஃபீல்ட் கிளையின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கான அபராதம் என நுகர்வோர் நீதிமன்றம் மேற்கோள் காட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SBI lost on Bengaluru woman’s legal battle; Rs 54.09 lakh loan waive off

SBI lost on Bengaluru womans legal battle; Rs 54.09 lakh loan waive off பெங்களூர் பெண்ணின் வழக்கில் எஸ்பிஐ தோல்வி.. 54.09 லட்சம் கடன் தள்ளுபடி.. 1 லட்சம் நஷ்டஈடு..!

Story first published: Friday, July 22, 2022, 12:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.