நியூயார்க் : என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக அமெரிக்கா, ஐ.நா.,வில் கொண்டு வந்த வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா, சீனா உள்ளிட்ட ஏழு நாடுகள் ஓட்டளித்தன. ஐ.நா.,வின், 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நடந்தது.
இக்கூட்டத்தில், என்.ஜி.ஓ.,க்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ‘விக்கிபீடியா’ நிறுவனத்தை நடத்தும் அறக்கட்டளை உட்பட, ஆறு என்.ஜி.ஓ.,க்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வரைவு தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது. இ
ந்த அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்காமல் ஐ.நா.,வின் என்.ஜி.ஓ.,க்கள் குழு இழுத்தடிப்பு செய்வதால், இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.மொத்தம், 36 நாடுகள் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்ட இத்தீர்மானத்துக்கு ஆதரவாக, 23 நாடுகள் ஓட்டளித்தன.
அதே நேரத்தில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், நைஜீரியா, ரஷ்யா, ஜிம்பாப்வே, நிகரகுவா ஆகிய ஏழு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளித்தன. மொத்தம், 18 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தன. ஐ.நா.,வின் என்.ஜி.ஓ.,க்கள் குழுவின் வாயிலாக அங்கீகாரம் கேட்காமல், வெளிப்படைதன்மை இல்லாமல், விதிகளுக்கு எதிராக தாக்கல் செய்ததால், அமெரிக்காவின் வரைவு தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement