கஷ்டப்படும் ஆயிரக்கணக்கான பிரித்தானிய குடும்பங்களுக்கு ஒரு சிறு நிதியுதவி…


கஷ்டப்படும் ஆயிரக்கணக்கான பிரித்தானிய குடும்பங்களுக்கு 75 பவுண்டுகள் வரையிலான மதிப்புடைய சூப்பர்மார்க்கெட் வவுச்சர்கள் வழங்கப்பட உள்ளன.

விலைவாசி உயர்வு முதலான பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுடைய கஷ்டத்தை சற்றே எளிதாக்கும் வகையில் இந்த கோடையிலேயே இந்த உதவி வழங்கப்பட உள்ளது.

முக்கியமான விடயம், இந்த உதவி, நீங்கள் வாழுமிடத்துக்கேற்ப மாறுபடும். உதாரணமாக Portsmouth நகர கவுன்சில் அந்நகர மக்களுக்கு 75 பவுண்டுகள் மதிப்பிலான சூப்பர்மார்க்கெட் வவுச்சர்களை வழங்க உள்ளது. 

உங்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்குமா, எவ்வளவு கிடைக்கும் என்பது போன்ற விடயங்களை உங்கள் நகர கவுன்சிலை அணுகி தெரிந்துகொள்ளலாம்.

ஒருவேளை இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற நீங்கள் தகுதியுடையவர்கள் அல்ல என்றாலும் கவலைப்படவேண்டாம், மளிகைப்பொருட்கள் வாங்க உதவும் வேறு பல திட்டங்களும் உள்ளன என்பதால், அவற்றைப் பயன்படுத்தி நீங்கள் பயன்பெறலாம்.
 

கஷ்டப்படும் ஆயிரக்கணக்கான பிரித்தானிய குடும்பங்களுக்கு ஒரு சிறு நிதியுதவி... | Thousands Of Struggling British Families

Courtesy: Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.