சிகிச்சைக்காக பெண்ணை பல கி.மீ., துாக்கிச் சென்ற மக்கள்| Dinamalar

மும்பை : மஹாராஷ்டிராவில், விபத்தில் காயமடைந்த பெண் ஒருவரை சிகிச்சைக்காக, கிராமத்தினர் பல கி.மீ., துாரம் துாக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பால்கர் மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், அவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி கட்டல், 40, என்ற பெண்மணி சமீபத்தில் விபத்து ஒன்றில் காயம்அடைந்தார். ஆனால், அருகில் மருத்துவமனை இல்லாததால், கிராமத்தினர் துணியால் ‘ஸ்ட்ரெச்சரை’ உருவாக்கி, அவரை பல கி.மீ., துாரம் சிகிச்சைக்காக துாக்கிச் சென்றனர். இதற்காக, நீரோட்டம் மிகுந்த ஆறு ஒன்றையும், வழுக்கு பாறைகளையும் உயிரைப் பணயம் வைத்து கடந்து சென்றனர். இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.