புதுடில்லி : புதுடில்லி ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ரயில்வே ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். புதுடில்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கணவனை பிரிந்து வாழ்கிறார். விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு ஒரு நண்பர் வாயிலாக ரயில்வே ஊழியர் சதீஷ்குமார் அறிமுகம் ஆனார். அவருக்கு வேலை வாங்கித் தருவதாக சதீஷ்குமார் உறுதிஅளித்திருந்தார்.
இந்நிலையில், 21ம் தேதி தன் மகன் பிறந்த நாள் விழாவுக்கு, சதீஷ்குமார் அந்தப் பெண்ணை அழைத்தார். கீர்த்தி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10:30 மணிக்கு அந்தப் பெண்ணை அழைத்து வந்த சதீஷ்குமார், புதுடில்லி ரயில் நிலையத்தில் இருந்த ஊழியர்களுக்கான அறையில் உட்கார வைத்தார்.சற்று நேரத்தில், அவருடன் பணியாற்றும் மேலும் மூவர் அங்கு வந்து, ஒருவர் பின் ஒருவராக அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தனர்.
மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை பிளாட்பார்மில் படுக்க வைத்து விட்டு சென்று விட்டனர்.மயங்கி கிடந்த பெண்ணை மீட்ட போலீசார், சிகிச்சைக்கு பின் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தை அடுத்து ரயில்வே ஊழியர்கள் சதீஷ்குமார், வினோத் குமார், மங்கள் சந்த் மீனா, ஜகதீஷ் சந்த் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement