
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்
ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தை நெல்சன் இயக்குகிறார் . அனிரூத் இசையமைக்கிறார். பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் ஜெயிலராக ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும், அதனால் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சிறையில் தான் நடக்கவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி படத்தின் பூஜை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.