ராகுலுடன் மல்லுக்கட்டும் ஸ்மிருதி இரானி – காங். குற்றச்சாட்டுக்கு மறுப்பு!

கோவா மாநிலத்தில் தனது மகள் பெயரில் சட்ட விரோத பார் நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டை, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கோவா மாநிலத்தில், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் குடும்பத்தினருக்கு சொந்தமான உணவகம் மோசடியில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. சில்லி சோல்ஸ் கஃபே மற்றும் பார் என்பது கோவா மாநிலத்தின் அசகாவோவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் குடும்பத்தினரால் நடத்தப்படும் உணவகமாகும்.

இதை ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த உணவகம் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. இறந்தவரின் பெயரிலேயே அந்த உணவகத்திற்கான குடியுரிமை பெறப்பட்டதாக கூறப்படுகிறது. கோவா மாநில கலால் வரி விதிகளின்படி, ஏற்கனவே உள்ள உணவகம் மட்டுமே மதுபானம் அல்லது பார் உரிமம் பெற முடியும். ஆனால் புதிதாக தொடங்கப்பட்ட சில்லி சோல்ஸ் கஃபே இன்னும் உணவக உரிமம் பெறவில்லை. அதில் மதுக்கடை நடத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த உணவகத்தின் மதுபான உரிமம் ஆண்டனி டிகாமாவின் பெயரில் உள்ளது. மேலும் கடந்த மாதம் தான் புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்தோனி டிகாமா என்ற உரிமத்தில் பெயரிடப்பட்ட நபர் 2021 ஆம் ஆண்டு மே மாதம் காலமானார். இந்த அந்தோணி திகாமா மும்பையின் வைல் பார்லேயில் வசித்தவர். மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அவரது மரணத்தை உறுதி செய்து இறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது.

சட்டத்தரணி ரோட்ரிக்ஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த மோசடியை அம்பலப்படுத்தினார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் குடும்பத்தினர் தொழில் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்துகளுடன் கலந்தாலோசித்து மெகா மோசடி குறித்து முழுமையான விசாரணை கோரி வழக்கறிஞர் ரோட்ரிக்ஸ் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விசாரணை வரும் 29 ஆம் தேதி வர உள்ளது.

இந்நிலையில் இன்று, இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ்
தலைமையின் தூண்டுதலின் படி எனது மகள் சட்ட விரோதமாக மதுக்கடை நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அவரது குணத்தை படுகொலை செய்வது மட்டுமல்லாமல், என்னை அரசியல் ரீதியாக கேவலப்படுத்தும் செயல் ஆகும். முறைகேடு இருந்தால் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். அதை விடுத்து தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடாது. இதற்கான பதிலை மக்கள் நீதிமன்றத்திலும், நீதிமன்றத்திலும் தேடுவேன். காங்கிரஸ் கட்சியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் பதில் அளிப்பேன்.

2024 மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா… போட்டியிட்டால் அவர் மீண்டும் தோல்வி அடைவார் என்று நான் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.