மாமியார் தான் காரணம்! திருமணமான ஐந்தே மாதத்தில் இளம் கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு..வெளியான அதிர்ச்சி ஆடியோ


சென்னையில் திருமணமான ஐந்து மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் இந்துமதி. இவருக்கும், தியாகராய நகரைச் சேர்ந்த குமரன் (37) என்ற நபருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

குமரனின் தாய் சாந்தி தனது மருமகள் மீது ஆரம்பம் முதலே வெறுப்பு காட்டியதாகவும், அதனால் அவரை அடிக்கடி திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் இந்துமதி கர்ப்பமாகியுள்ளார்.

ஆனாலும் மாமியாரின் துன்புறுத்தல் நீடிக்கவே, கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு இந்துமதி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மனைவியை அழைக்க கணவர் மற்றும் அவரது வீட்டில் இருந்தும் யாரும் வராததால் விரக்தியில் இருந்த இந்துமதி, தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

அதற்கு முன்பாக எனது சாவுக்கு மாமியார் தான் காரணம். நானும், பாப்பாவும் செல்கிறோம் என அவர் வாட்ஸ்அப்பில் ஆடியோ பதிவு செய்து அனுப்பிவிட்டு, வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாமியார் தான் காரணம்! திருமணமான ஐந்தே மாதத்தில் இளம் கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு..வெளியான அதிர்ச்சி ஆடியோ | Young Pregnant Lady Hanged Mother In Law Torture

வீடு திரும்பிய இந்துமதியின் சகோதரி, தனது தங்கை தூக்கில் தூங்கியதைப் பார்த்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்துமதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருமணமான ஐந்தே மாதத்தில் இளம் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மாமியார் தான் காரணம்! திருமணமான ஐந்தே மாதத்தில் இளம் கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு..வெளியான அதிர்ச்சி ஆடியோ | Young Pregnant Lady Hanged Mother In Law Torture   Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.