ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யப்படும் உணவுகளை சப்ளை செய்யும் நிறுவனமான ஸ்விக்கி தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளனர்.
இந்த வேலைநிறுத்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெற்றால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
ஸ்விக்கி , சோமேட்டோவ விடுங்க.. டெலிவரி மேன்களோட உண்மையான பிரண்ட்ஷிப்ப பாருங்க..!

ஸ்விக்கி வேலைநிறுத்தம்
ஆன்லைன் உணவு ஆர்டர் செய்யும் தளமான ஸ்விக்கியின் நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஜூலை 21 அன்று பெங்களூரு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். குறைவான ஊதியம், குறைக்கப்பட்ட ஊக்கத்தொகை மற்றும் வேலை பாதுகாப்பு குறித்த கவலைகள் குறித்து IFAT தெரிவித்துள்ளது. IFAT டெலிவரி செய்யும் தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகும்.

3,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
சுமார் 3,000 தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த வேலைநிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாபஸ் பெறப்பட்டது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை. ஸ்விக்கியின் நிர்வாகம் டெலிவரி பார்ட்னர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளதால் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது என்று IFAT செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

மீண்டும் வேலைநிறுத்தம்
ஆனால் அதே நேரத்தில் அடுத்த ஒரு வாரத்தில் அவர்கள் தீர்வு காணவில்லை என்றால், ஒரு செயல் திட்டத்துடன் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று IFAT இன் தேசிய பொதுச் செயலாளர் ஷேக் சலாவுதீன் கூறினார்.

பேஅவுட் மற்றும் ஊக்கக் கட்டமைப்பு
ஆனால் பெங்களூரின் சில பகுதிகளில் வேலைநிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டாலும் ஒரு சில டெலிவரி எக்சிகியூட்டிவ்களின் பிரச்சனைகளை சரிசெய்ய நாங்கள் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளோம் என்றும், வேலைநிறுத்த காலக்கட்டத்தில் சில மண்டலங்கள் முழுமையாக செயல்பட்டன’ என்றும் ஸ்விக்கியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். டெலிவரி எக்ஸிகியூட்டிவ்களின் வருமானம், அவர்கள் செய்யும் பணிக்கு இணையாக இருப்பதை உறுதி செய்வதற்காக, எங்களது பேஅவுட் மற்றும் ஊக்கக் கட்டமைப்பை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்

8-9 மணி நேரம் வேலை
எங்கள் தினசரி இலக்கை அடைய இப்போது எங்களுக்கு 14 மணிநேரம் ஆகும் என்றும், எங்கள் தினசரி இலக்கை முடிக்க 8-9 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய விரும்புகிறோம் என்று ஸ்விக்கி தொழிலாளர் ஒருவர் கூறினார்.

லாஜிஸ்டிக்ஸ்
மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் வழங்குநர்களுக்கு ஸ்விக்கி அதிக ஆர்டர்களை அனுப்புவதாகவும், இது டெலிவரி பார்ட்னர்களின் தினசரி வருவாயைப் பாதிக்கிறது என்றும் சலாவுதீன் என்ற ஸ்விக்கி தொழிலாளர் கூறினார்.

சிக்கல்கள்
விண்ணைத் தொடும் பெட்ரோல் விலைகளுக்கு இழப்பீடு இல்லாமை, முதல் மைல் ஊதியம் இல்லாமை, போனஸ் இல்லாமை மற்றும் தினசரி வருவாய் வரம்புகள் உள்ளிட்ட சிக்கல்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என டெலிவரி பார்ட்னர்களின் கோரிக்கைகளாக உள்ளது. ஸ்விக்கி தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து ஸ்விக்கி நிர்வாகம் வேலைநிறுத்தத்தை தடுக்குமா? அல்லது வேலைநிறுத்தம் மீண்டும் தொடருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முக்கிய கோரிக்கைகள்
டெலிவரி பார்ட்னர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு
* குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை தற்போதுள்ள ரூ.35ல் இருந்து உயர்த்த வேண்டும்.
* தற்போதுள்ள ரூ6/கிமீ தொலைவு ஊதியத்தை ரூ.10/கிமீ ஆக உயர்த்த வேண்டும்.
* மாதாந்திர மதிப்பீடு ஊக்கத்தொகை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
* Shadowfax மற்றும் Rapido போன்ற மூன்றாம் தரப்பினருக்கு ஆர்டர் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
* இரவு நேர டெலிவரியின் போது பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன. சில டெலிவரி பார்ட்னர்கள் வன்முறை மற்றும் கொள்ளைக்கு ஆளாகியுள்ளனர். எனவே இரவு நேர டெலிவரியை குறைக்க வேண்டும்.
Need more than Rs.35 say Swiggy workers who threaten strike against new policies
Need more than Rs.35 say Swiggy workers who threaten strike against new policies | டெலிவரி பார்ட்னர்களின் திடீர் வேலைநிறுத்த அறிவிப்பு.. ஸ்விக்கி நிலை என்ன?