புதுடில்லி :தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதான மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற மனு மீதான விசாரணை வரும் ஆக.2 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
ரூ. 4,800 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை, தன் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதாக தி.மு.க., குற்றஞ்சாட்டியது.இது தொடர்பாக தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ல் வழக்கு தொடுத்தார். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தார். இதனை உயர் நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 2018ல் பழனிசாமி மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு இடைக் காலத் தடை விதித்து, 4 ஆண்டுகளாகியும் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படவில்லை.
இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வழக்குகளின் பட்டியலை, உச்ச நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டார். மனுதாரர் பாரதி சார்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் மனு விசாரணையை வரும் ஆக.2 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement