வாழைச்சேனையில் இடி மின்னல்: வீடுகளுக்கு சேதம்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் நேற்று (25) பிற்பகல் வேளையில் இடம்பெற்ற இடி மின்னல் காரணமாக ,பிரதேசத்தில் மின்சாரப் பொருட்கள் பல சேதமடைந்துள்ளன.

வாழைச்சேனை விநாயகபுரத்தில் பிற்பகல் வேளையில் இரண்டு வீடுகளில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

தென்னை மரங்களில் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டதனால் தீ பற்றியுள்ளது. தீ வீட்டின் கூரையின் மீது பரவியதனையடுத்து சம்பவம் அறிந்த அயலவர்கள் தீ பரவாமல் தடுத்துள்ளனர்.

இதேவேளை ,குறித்த வீடுளில் வசித்தோர் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றிருந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை

ஆனால் குறித்த பிரதேசத்தில் பல வீடுகளில் பாவனையில் இருந்த மின்பாவனைப் பொருட்கள் பல சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள்  தெரிவித்தனர்.

Media Unit, – Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.