கள்ளகுறிச்சி பள்ளிக்கலவரம் தொடர்பாக ஒரே நாளில் ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கணியாமூர் பள்ளியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக வீடியோ பதிவுகளை வைத்து விசாரித்த காவல்துறையினர் பள்ளி சுவரை சேதப்படுத்திய மற்றும் பொருட்களை சூறையாடிய கள்ளக்குறிச்சியை சேர்ந்த அருண் குமார், கமல்ராஜ், ஸ்ரீதர், சின்னசேலத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, கடலூர் மாவட்டம் அன்னாவள்ளியை சேர்ந்த பாலமூர்த்தி, சங்கராபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார், கார்த்தி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.