இந்தியாவில் பருவமழை இயல்பை விட 11% அதிகமாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் விநியோகம் சீரற்றதாக உள்ளது மற்றும் இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்திக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.
இதனால் இந்தியாவில் ஏற்கனவே மோசமாக இருக்கும் பணவீக்கத்தின் அளவு மேலும் மோசமாக்கலாம் என்று சந்தை ஆய்வாளர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
ஜூலை மாதம் என்பது காரீஃப் பயிர்களுக்கு (கோடை பயிர்கள்) ஒரு முக்கிய காலம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது காரீஃப் பயிர்களின் விதைக்கும் பணிகள் தொடங்கும்.
எஸ்பிஐ-ல் மட்டும் ரூ.1.45 லட்சம் கோடி ரைட் ஆப்.. ஒரே வங்கியில் இவ்வளவா.. மற்ற வங்கிகளின் நிலை?

வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சாதாரணமாக இருக்கும் என கணித்துள்ளது. மழை புவியியல் ரீதியாகச் சீரற்றதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

முக்கிய மாநிலம்
IMD தரவுகள் படி ஜூலை 20 வரையில் உத்தரப்பிரதேசத்தில் 68%, ஜார்க்கண்டில் 51%, பீகாரில் 49%, மணிப்பூரில் 40%, திரிபுராவில் 30%, மேற்கு வங்கத்தில் 27%, டெல்லியில் 22%, மிசோரமில் 21%, நாகாலாந்தில் 18%, உத்தரகாண்டில் 16% மழை பற்றாக்குறை உள்ளது.

கோடை பயிர்
ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை அதிகரித்து, புவியியல் ரீதியாக இன்னும் சீரானதாக இருந்தால், கோடை பயிர் விதைக்கும் பணிகள் அடுத்த மாதத்திலும் அதிகரிக்கும். எனவே, எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுவதற்கு இது மிகவும் முன்கூட்டிய காலமாக உள்ளது.

சீரற்ற மழைப்பொழிவு
ஆனால் இந்த சீரற்ற மழைப்பொழிவு நிலை தொடர்ந்தால் உணவு தானிய உற்பத்தி அளவுகள் சரியும், குறிப்பாக அரிசி உற்பத்தி குறையும். விவசாய துறையின் ஜிவிஏ வளர்ச்சிக்கும், உணவு பணவீக்கத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று ஆராய்ச்சி நிறுவனமான நோமுராவின் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

நெல் சாகுபடி
மழைப்பொழிவு இல்லாத பகுதிகளில் முக்கியமாகப் பயிரிடப்படும் நெல் சாகுபடி ஆண்டு அடிப்படையில் 17% குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பருப்பு வகைகள் அதிகமாக உள்ளன, ஆனால் துவரம் பருப்பு விதைத்தல் கிட்டத்தட்ட 20% குறைந்துள்ளது. அதே நேரத்தில் பாசிப்பருப்பு அதிகமாக உள்ளது.

உணவு தானிய பரப்பளவு
மேலும் ஜூலை மத்தியிலான தரவுகள் படி தானியங்கள், எண்ணெய் விதைகள் மற்றும் பருத்தியின் விதைத்தல் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, உணவு தானிய பரப்பளவு ஆண்டுக்கு -4.6% ஆக உள்ளது என நோமுரா கணித்துள்ளது.
Food Inflation may peaks soon amid India sees uneven distribution of rainfall
Food Inflation may peaks soon amid India sees uneven distribution of rainfall சீரற்ற பருவமழை.. உணவு பணவீக்கம் உச்சத்தை தொடலாம்..!