பிராட் பிட்டின் ‘புல்லட் ட்ரெயின்’ படம் இந்தியாவில் ஒருநாள் முன்பே வெளியீடு

பிராட் பிட் நடித்துள்ள ‘புல்லட் ட்ரெயின்’ திரைப்படம் இந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இந்திய திரையரங்குகளில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிறது.

மூன்று வெற்றிகரமான திரைப்பட பிரீமியர்கள் உள்பட பல நிகழ்ச்சிகளில் தோன்றிய ’பிராட் பிட்’ புகழ்பெற்ற சிவப்பு கம்பள தோற்றத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, இன்னும் ஒரு உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி – நகைச்சுவை கலந்த திரைப்படமான ‘புல்லட் ட்ரெயின்’ திரைப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 4, 2022 அன்று இந்தியாவில் வெளியாகவுள்ளது. ‘டெட்பூல் 2’ இயக்குநர் டேவிட் லீட்ச் இயக்கிய இந்த திரைப்படத்தில், ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான சில முன்னணி நட்சத்திர குழுவினர் இணைந்து நடித்துள்ளனர்.

image

முதன்மை பாத்திரத்தில் பிராட் பிட் நடிக்க, கிஸ்ஸிங் பூத் நடிகர், பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது வென்றவர் மற்றும் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, ஜோய் கிங் மற்றும் பலமுறை பிரைம் டைம் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரையன் டைரி ஹென்றி, ‘அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ புகழ் ஆரோன் டெய்லர்-ஜான்சன், ‘தி பாய்ஸ்’ புகழ் கரேன் ஃபுகுஹாரா, ‘ப்யூரி’ புகழ் லோகன் லெர்மன் ஆகியோர் நடிக்கின்றனர்.

பிராட் பிட் 2019-ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக பெரிய திரைக்கு திரும்பும் அதே வேளையில், அகாடமி விருது பெற்ற நடிகை சாண்ட்ரா புல்லக் இவருடன் இணைந்து ‘புல்லட் ட்ரெயின்’ படத்தில் தோன்றுவதை காணலாம். இவர்களுடன் நடிகர் ஆரோன் டெய்லர்-ஜான்சன் அடுத்ததாக மார்வெலின் கிராவன் தி ஹன்டராகக் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.

image

Sony Pictures Entertainment India ‘புல்லட் ட்ரெயின்’ திரைப்படத்தை, உலகளாவிய வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக, ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி, இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.