அமெரிக்காவின் வட்டி அதிகரிப்பு.. மக்கள் மத்தியில் எப்படி தாக்கத்தினை ஏற்படுத்தலாம்?

அமெரிக்க குடும்பங்களில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை ஃபெடரல் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

தொடர்ந்து 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ள பணவீக்கத்தினை சிதைக்க, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் மிக தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், சப்ளை சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை ஊக்கப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை தொடர்ந்து உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் கழிவில் ரூ.1 கோடி வருமானம்.. அசத்தும் டெல்லி கனிகா..!

 என்ன தாக்கம்?

என்ன தாக்கம்?

குறிப்பாக சர்வதேச அளவில் முன்னணி பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவில், தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. இது எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம், வாருங்கள் பார்க்கலாம்.

வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு 4வது முறையாக வட்டி விகிதமானது அதிகரித்துள்ளது. இது வீட்டுக் கடனுக்கான வட்டியை அதிகரிக்கலாம். இதனால் வீடு விற்பனையை பாதிக்கலாம், கிரெடிட் கார்டு வட்டியும் அதிகரிக்கலாம், வாகன கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கலாம் .

என்னென்ன பிரச்சனைகள் ஏற்படலாம்?
 

என்னென்ன பிரச்சனைகள் ஏற்படலாம்?

மத்திய வங்கியின் இந்த முடிவால் மக்களின் செலவு குறையும். தேவையும் குறையலாம். இது பொருளாதார வளர்ச்சியினை மெதுவாக்கலாம். இது ரெசசனை தூண்டலாமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இது வேலையின்மை பிரச்சனையை அதிகரிக்கலாம். பணி நீக்கத்தினை தூண்டலாம். இது மேற்கொண்டு பங்கு விலைகள் சரிய காரணமாக அமையலாம். நிறுவனங்களின் வளர்ச்சி சரியலாம்.

பொதுமக்களை எப்படி பாதிக்கலாம்?

பொதுமக்களை எப்படி பாதிக்கலாம்?

அமெரிக்க மத்திய வங்கியின் இந்த வட்டி அதிகரிப்பானது சாதாராண பொதுமக்களை எப்படி பாதிக்கலாம். குறிப்பாக இந்தியாவில் மக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

அமெரிக்காவின் வட்டி அதிகரிப்பின் எதிரொலியாக, இந்திய மத்திய வங்கியும் வட்டியை அதிகரிக்க தூண்டலாம்.

அடமானக் கடன்

அடமானக் கடன்

குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது வீடு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எனினும் அடமான கடன்கள் மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்புடன் இணைந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. சில சமயங்களில் அவை எதிர் திசையில் கூட செல்லலாம். இது பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படலாம். நீண்டகால அடமானங்கள் 10 ஆண்டு கருவூல சந்தையினை கண்கானிக்க முனைகின்றன. இது பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வீடு விற்பனையானது சரிவினைக் கண்டு வருகின்றது. ஜூன் மாதத்தில் கூட வீடு விற்பனையானது கணிசமான சரிவினைக் கண்டுள்ளது. மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பானது அடமான கடனில் மாற்றத்தினை ஏற்படுத்தாவிட்டாலும், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது வீடு விற்பனை சரிய காரணமாக அமையலாம்.

இப்போது கார் வாங்கலாமா?

இப்போது கார் வாங்கலாமா?

ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்பானது மேற்கொண்டு வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது வாகன கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது வாகன விற்பனை சரிய தூண்டலாம். இது வாகன உற்பத்தியாளர்கள் மத்தியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு எரிபொருள், உணவு பொருட்கள், வாடகை என அனைத்தினையும் அதிகரிக்க தூண்டலாம்.

 கிரெடிட் கார்டு?

கிரெடிட் கார்டு?

கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற நிலையில் இதுவும், அதிக வட்டி செலுத்த தூண்டலாம். இது கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறுபவர்களுக்கு அதிக வட்டி செலுத்த வழிவகுக்கலாம்.

சேமிப்பில் எப்படி தாக்கம்?

சேமிப்பில் எப்படி தாக்கம்?

அதிகரித்து வரும் வட்டி விகிதத்தின் மத்தியில், நிரந்தர வருமானம் தரும் முதலீடு உள்ளிட்ட முதலீடுகளிலும் லாபம் அதிகரிக்கலாம். ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதத்தினை அடுத்து பிக்சட் டெபாசிட், பண சந்தை என அனைத்திலும் ஏற்றம் இருக்கலாம். இது முதலீட்டாளர்களின் லாபத்தினை அதிகரிக்கலாம். இது கடனுக்கான வட்டியை அதிகரித்தாலும், சேமிப்பிற்கான வட்டியும் அதிகரிக்கலாம்.

கிரிப்டோவில் எப்படி தாக்கம் இருக்கும்?

கிரிப்டோவில் எப்படி தாக்கம் இருக்கும்?

அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியதில் இருந்தே பிட்காயின் மதிப்பானது குறைந்து வருகின்றது. தொடர்ந்து பிட்காயின் மதிப்பானது 68,000 டாலர்களில் இருந்து 21,000 டாலர்களாக சரிவினைக் கண்டுள்ளது. வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பான பத்திர சந்தை, வங்கி முதலீடுகள் உள்ளிட்ட முதலீடு அதிகரித்துள்ளது. இது பங்கு சந்தை, கிரிப்டோகரன்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கல்விக் கடன் பேமெண்ட் அதிகரிக்கலாம்

கல்விக் கடன் பேமெண்ட் அதிகரிக்கலாம்

பணவீக்கம் என்பது தொடர்ந்து மக்களின் செலுத்தும் திறனை குறைக்கிறது. இது மக்களின் வருமானத்தினை குறைக்க வழிவகுக்கலாம். இதற்கிடையில் வட்டி அதிகரிப்பானது தொடர்ந்து உங்கள் கடனுக்கான வட்டி விகிதத்தினையும் அதிகரிக்கலாம். இதனால் இனி கூடுதலாக வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

கோவை அக்சென்ச்சரில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. எப்படி அப்ளை செய்வது?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How will the increase in interest rates in the United States affect people?

How will the increase in interest rates in the United States affect people?/அமெரிக்காவின் வட்டி அதிகரிப்பு.. மக்கள் மத்தியில் எப்படி தாக்கத்தினை ஏற்படுத்தலாம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.