ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ‘கிரீன் கோ’ எரிசக்தி மின் திட்டம் அல்ட்ரா மெகா சோலார் பூங்கா: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி ஆய்வு

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் ‘கிரீன் கோ’ எரிசக்தி மின் திட்டம், அல்ட்ரா மெகா சோலார் பூங்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி சித்தார்த் கவுஷல் ஆய்வு செய்தார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஓர்வக்கல்லு அடுத்த கும்மிதம்தாண்டா கிராமத்தில்  ‘கிரீன் கோ’ ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம்  அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சகுனாலா கிராமத்தில் கிரீன் கோ கனி அல்ட்ரா மெகா சோலார் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் பாதுகாப்பு குறித்து கர்னூல் மாவட்ட எஸ்பி சித்தார்த் கவுஷல்  நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு குறித்து மேம்பாடு குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, அவர் பேசுகையில், ‘சிசிடிவி கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்த வேண்டும். புறகாவல் நிலையம் அமைக்க பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். ஆய்வின்போது சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரசாத், ஓர்வக்கல்லு சிறப்பு எஸ்ஐ மல்லிகார்ஜூனா, துணை திட்ட இயக்குநர் நாயுடு, பாதுகாப்பு பொறுப்பாளர் கோட்டேஸ்வரராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.