‘உனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் படிப்பு வராது… நீயெல்லாம் எங்க பாஸ் ஆகப் போறே… கழுதை மேய்க்கத்தான் லாயக்கு….’ இது போன்ற வார்த்தைகளை, நம்மில் பலரும் கடந்து வந்திருப்போம்.

கற்கும் திறன் என்பது ஒவ்வொரு மாணவருக்கும் வேறுபடும். சிலர் பாடங்களை வேகமாக உள்வாங்கிக் கொள்வார்கள். சிலருக்கு கூடுதல் கவனம் தேவை. ஆனால் இங்கு அனைவருக்கும் ஒன்றுபோல கற்பித்துவிட்டு, அனைத்து மாணவர்களிடமும் ஒரே மாதிரி ரிசல்ட்டை எதிர்பார்ப்பதுதான் அதிகம் நடக்கிறது. அந்த எதிர்பார்ப்புகள் தகரும்போது குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களின்மீது வசை சொற்கள் விழும்.
டியூஷன் ஆசிரியர் ஒருவர், ‘நீ தேர்ச்சி பெறமாட்டாய்’ எனக் கூறிய மாணவி ஒருவர், தன்னுடைய ஆசிரியரின் வாட்ஸ்அப் நம்பரை கண்டுபிடித்து ஒரு செய்தியைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “ஹலோ மேடம், 2019 – 2020-ம் ஆண்டில் உங்களிடம் 10 -ம் வகுப்பு பயின்ற மாணவிகளில் நானும் ஒருவர். இந்த மெசேஜை உங்களுக்கு அனுப்புவதற்கு காரணம், என்னால் படிப்பில் தேர்ச்சி பெற முடியாது என ஒவ்வொருமுறையும் நீங்கள் என்னை மட்டம் தட்டித் தாழ்த்தியது தான்.
இன்று நான் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றுள்ளேன். அதுமட்டுமல்லாமல் நான் விரும்பிய பல்கலைக்கழகத்தில், எனக்குப் பிடித்த பாடத்தையே பயில்கிறேன். இது உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான மெசேஜ் அல்ல, என்னால் முடியும் என உங்களிடம் காட்ட அனுப்பப்பட்ட மெசேஜ்.
Two years ago, me and my friend decided to text our teacher the day our results come out ð pic.twitter.com/iDUd6XyhZG
â famouspringroll (@hasmathaysha3) July 22, 2022
இனி மாணவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், குறிப்பாக, உங்களின் உதவி தேவைப்படும் மாணவர்களிடம் கனிவாக இருங்கள்’ என அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ட்விட்டரில் உள்ள இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.