ஜி ஜின்பிங் உடன் ஜோ பைடன் பேச்சுவார்த்தை.. எதற்காகத் தெரியுமா..?!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலக்குடன் சீனா திட்டமிட்டு அதற்கான பாதையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா உடனான நட்புறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

இதற்கிடையில் சீனா, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து கைப்பற்றியதை போல் அண்டை நாடான தைவான்-ஐ கைப்பற்றும் முயற்சியில் உள்ளது. தைவானுக்கு அமெரிக்கா துணை நிற்கும் நிலையில் சீனா போர் தொடுத்தால் மீண்டும் பெரிய பிரச்சனை உருவாகும்.

இதற்கு மத்தியில் தான் சீன அதிபரான ஜி ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஐடி ஊழியர்களின் சராசரி சம்பளம் சரிவு.. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ என்ன செய்கிறது..?!

ஜோ பைடன்

ஜோ பைடன்

சமீபத்தில் அமெரிக்க அரசு ஜோ பைடன் தலைமையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கப் பல நாடுகள் உடன் இணைந்து முக்கியமான வர்த்தகக் கட்டமைப்பு, கொள்கைகளை உருவாக்கியது மறக்க முடியாது. அமெரிக்கா சீனாவுக்கு எதிராகத் தெற்காசிய நாட்டில் புதிய சக்தியை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு

இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு

இதன் வாயிலாகத் தான் அமெரிக்கா மே மாதம் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு (ஐபிஇஎஃப்) பொருளாதாரச் செழுமைக்காக வெளியிடப்பட்டது. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க வலுவான பொருளாதாரக் கொள்கை அடிப்படையில் இந்தக் கூட்டமைப்பு 12 நாடுகள் உடன் இணைந்து உருவாக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தைவான் - சீனா
 

தைவான் – சீனா

இந்த நிலையில் தைவான் – சீனா மத்தியில் உருவாகியுள்ள புதிய பிரச்சனைகள் மற்றும் பதற்றமான சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனா - அமெரிக்கா நட்புறவு

சீனா – அமெரிக்கா நட்புறவு

சீனா – தைவான் பிரச்சனை, ரஷ்யாவுக்குச் சீனாவின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் சீனா – அமெரிக்கா மத்தியிலான நட்புறவில் பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் தான் மார்ச் மாதத்திற்குப் பின்பு இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

1972 க்குப் பின்

1972 க்குப் பின்

சீனாவிற்கான அமெரிக்கத் தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ் ஜூன் மாதம், 1972 க்கு பின்பு சீனா – அமெரிக்காவின் இராஜதந்திர உறவுகள் மீண்டும் தொடங்கியதிலிருந்து சீனாவுடனான உறவு “மிகவும் மோசமான நிலைக்கு” தள்ளப்பட்டு உள்ளது என்று கூறினார்.

நான்சி பெலோசி

நான்சி பெலோசி

இந்தக் கருத்து வர முக்கியக் காரணம் அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டுச் செல்லுவதாக அறிவித்த போது, சீனா நாங்கள் அனைத்திற்கும் தயார் என்று அறிவித்துப் பெரும் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.

 வரித் தளர்வு

வரித் தளர்வு

இதற்கிடையில் தான் சீனா உடனான நட்புறவை மேம்படுத்த சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளைத் தளர்த்தவும், குறைக்கவும் திட்டமிட்டு உள்ளதாக ஜோ பைடன் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்நிலையில் ஜி ஜின்பிங் உடனான ஜோ பைடன் பேச்சுவார்த்தைக்குப் பின்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபீஸ்-க்கு வர முடியாது, அதுவும் 5 நாளெல்லாம் ரொம்ப ஓவர்.. ஐடி ஊழியர்கள் பதில்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

joe Biden, Xi jinping to hold talks today amid fresh tensions over Taiwan and US-China ties worsen after 1972

joe Biden, Xi jinping to hold talks today amid fresh tensions over Taiwan and US-China ties worsen after 1972 ஜி ஜின்பிங் உடன் ஜோ பைடன் பேச்சுவார்த்தை.. எதற்காகத் தெரியுமா..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.