திருப்பூர் மாவட்டத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நாட்டான்வலசு அருகே உள்ள என்.காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (35). இவர் நேற்று மாலை குளித்துவிட்டு வருவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் வெகு நேரமாகியும் பிரகாஷ் வீட்டுக்கு வரவில்லை என்பதால், குடும்பத்தினர் அவரைத் தேடி சென்றுள்ளனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 12 அடி தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இது குறித்து விசாரணை செய்ததில், பிரகாஷ் குளிக்க வரும் போது குடிபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.