அமெரிக்காவின் முன்னணி பாஸ்ட் புட் நிறுவனமான McDonald’s தனது பிரபலமான உணவுகளில் ஒன்றான சீஸ் பர்கரின் விலையை 14 ஆண்டுகளில் முதன்முறையாகப் பிரிட்டன் நாட்டில் பணவீக்கத்தின் பாதிப்பால் விலை உயர்வை எதிர்கொண்டு உள்ளது.
McDonald’s நிறுவனத்தின் பிரிட்டன் நாட்டின் உணவக நெட்வொர்க்கில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை எதிர்கொள்ளும் பஃபர் அளவை தாண்டிய காரணத்தால் இந்நிறுவனத்தின் அடையாளமாக விளங்கும் சீஸ் பர்கரின் விலையை உயர்த்துவதைப் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.
இதன் மூலம் ஒரு சீஸ் பர்கரின் விலை 99 பென்ஸ்-ல் இருந்து 1.19 பவுண்ட் என மொத்தம் 20% உயர்ந்துள்ளது.
பெங்களூர் பெண்ணின் வழக்கில் எஸ்பிஐ தோல்வி.. 54.09 லட்சம் கடன் தள்ளுபடி.. 1 லட்சம் நஷ்டஈடு..!

மெக்டொனால்டு
பிரிட்டனில் மெக்டொனால்டு தனது சீஸ் பர்கரின் விலையை 2008 ஆம் ஆண்டு உலகளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் போது தான் கடைசியாக உயர்த்தியது. அதன் பின்பு தற்போது உணவு பொருட்கள் விலை உயர்வாலும், தட்டுப்பாடுகள் காரணமாகவும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைச் சமாளிக்க முடியாமல் மீண்டும் விலையை உயர்த்தியுள்ளது மெக்டொனால்டு.

விலை உயர்வு
மெக்டொனால்டு நிறுவனத்தின் பிரிட்டன் உணவு மெனுவில் உள்ள மற்ற பொருட்களின் விலை 10 பென்ஸ மற்றும் 20 பென்ஸ் வரை அதிகரித்துள்ளது. இதில் முக்கியமான மற்றும் அதிகமானோரால் வாங்கப்படும் McNugget-ன் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது.

சில உணவுகளுக்கு மட்டும் பழைய விலை
ஆயினும் அனைத்து உணவுகளின் விலையை உயர்த்தாமல் சில பொருட்களின் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படாமல் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான தளத்தை உருவாக்க உள்ளதாக மெக்டொனால்டு தெரிவித்துள்ளது.

பிரான்சைஸ் உணவகங்கள்
இதற்கிடையில், மெக்டொனால்டு நிறுவனத்தின் பிரான்சைஸ் உணவகங்களில் விலைகள் தொடர்ந்து மாறுபடும், அதேபோல் நிர்வாகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் விலைகளை நிர்ணயிக்கலாம் எனப் பிரான்சைஸ் உணவகங்களிடம் மெக்டொனால்டு தெரிவித்துள்ளது.

பணவீக்கம் 9.4 சதவீதம்
பிரிட்டன் நாட்டில் ஜூன் மாதம் பணவீக்கம் 9.4 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இது கடந்த 40 வருடத்தில் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் பிரிட்டன் நாட்டில் எரிபொருள் விலை, சம்பளம், உணவு பொருட்கள் மீதான செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தால் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

36000 உணவகங்கள்
மெக்டொனால்டு நிறுவனம் சுமார் 36000 உணவகங்களை 100க்கும் அதிகமான நாடுகளில் வைத்துள்ளது. பிரிட்டன் நாட்டில் தற்போது விலை உயர்த்துள்ளதைப் போல் கடந்த வருடமே அமெரிக்காவில் பெரும்பாலான கடைகளில் விலையை உயர்த்தியுள்ளது.

சீஸ் பர்கர், பிட்சா
வெளிநாடுகளில் இந்தச் சீஸ் பர்கர், பிட்சா போன்றவை விலை மலிவானதாக இருக்கும் நிலையில் இந்தியாவில் இதன் விலை அதிகம் என்பதால் பெரும்பாலான மக்கள் சாப்பிடும் உணவுகளின் கீழ் இது வராது.. இதுவே இந்தியாவில் தோசை, இட்லி, சப்பாத்தி விலை உயர்ந்தால் தான் கவலை.
கூட்டம் கூட்டமாக வெளியேறும் இந்தியர்கள்.. என்ன காரணம்..?!
McDonald’s price of a cheeseburger raise in UK after 14 years
McDonald’s price of a cheeseburger raised in UK after 14 years | McDonald: 4 வருடத்திற்குப் பின் விலை உயர்வு.. சமாளிக்க முடியல மக்களே..!