பாக்.,கில் ஹிந்து பெண்டி.எஸ்.பி.,யாக தேர்வு| Dinamalar

கராச்சி:பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்து மதத்தை சேர்ந்த பெண் போலீஸ் டி.எஸ்.பி.,யாக தேர்வாகி உள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில உள்ள ஜகோபாபாத் என்ற இடத்தை சேர்ந்தவர் மணிஷா ரூபேட்டா 26. சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். இவரையும் இவரது சகோதர சகோதரிகளையும் கராச்சி அழைத்து வந்து அவரது தாயார் வளர்த்து ஆளாக்கினார்.
மணிஷாவின் மூன்று சகோதரிகள் டாக்டர்களாக உள்ளனர். ஒரு சகோதரர் எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார். எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு எழுதிய மணிஷா ஒரு மதிப்பெண்ணில் அதை தவறவிட்டார். இதையடுத்து அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதி அதில் 16வது இடத்தில் தேர்ச்சி பெற்றார்.
இதையடுத்து சிந்து மாகாணத்தில் போலீஸ் டி.எஸ்.பி.,யாக தேர்வாகி உள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்து மதத்தை சேர்ந்த பெண் டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்துள்ளதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.