ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் மூக்குச் சக்கரம் பழுதடைந்ததால் துபாயில் இருந்து மதுரைக்குப் புறப்பட்ட விமானம் ஜூலை 11 ஆம் தேதி தாமதம் ஆனது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் இதுபோல் 24 நாட்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது ஒன்பதாவது சம்பவம் இதுவாகும் என்பதால் மக்கள் மத்தியில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பின்பு விமானச் சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் நாட்டின் முன்னணி மலிவு விலை விமானச் சேவையை அளிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் நடந்த கோளாறு காரணமாக விமானப் போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடைசியில் பங்களாதேஷ்-ம் மாட்டிக்கொண்டது.. இந்திய மட்டும் தப்பித்தது எப்படி..?!

ஸ்பைஸ்ஜெட்
ஜூன் 19 முதல் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மீண்டும் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து டிஜிசிஏ ஒரு ஷோ-காஸ் நோட்டீஸ் ஜூலை மாதம் அனுப்பியது. இது விமான நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை அளித்தது, இதற்கு முக்கியக் காரணம் அவ்வப்போது இண்டிகோ விமானங்களிலும் கோளாறு ஏற்படுகிறது.

மேற்பார்வை மற்றும் போதிய பராமரிப்பு இல்லை
இதைத் தொடர்ந்து விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் மோசமான உள் பாதுகாப்பு மேற்பார்வை மற்றும் போதிய பராமரிப்பு நடவடிக்கைகள் எடுக்காதது பாதுகாப்பு விளிம்புகளின் சீரழிவுக்கு வழிவகுத்துள்ளன என்று மறு ஆய்வு தெரிவித்துள்ளது.

50 சதவிகித விமானம்
இந்த நிலையில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குப் புதிய கட்டுப்பாட்டை விதித்து, இதில் , ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதவிகித விமானச் சேவையை மட்டுமே இயக்க வேண்டும் என அறிவித்துள்ளது. மீதமுள்ள விமானங்களின் கோளாறுகளைச் சரி செய்ய அவகாசமும் அளிக்கப்பட்டு உள்ளது.

2 வருட சரிவு
மேலும் விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் இந்த 8 வாரங்களும் விமான நிறுவனத்தின் சேவைகள் தீவிர கண்காணிப்புக்கு உட்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 2 வருட சரிவை எட்டியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் நாட்டின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் பங்குகள் இன்றைய வர்த்தக முடிவில் 3.52 சதவீதம் சரிந்து 36.95 ரூபாயாகச் சரிந்துள்ளது. இன்றைய சரிவுக்கு முழு முக்கியக் காரணம் விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகத்தின் 50 சதவீத விமான இயக்க கட்டுப்பாடுகள் தான்.

2022ல் 45.50 சதவீதம் சரிவு
2022ல் மட்டும் ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 45.50 சதவீதம் சரிந்து ஒரு பங்கு விலை 30.85 ரூபாய் சரிந்து இன்றைய வர்த்தக முடிவில் 36.95 ரூபாயாக உள்ளது. மேலும் இன்றைய வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 34.60 ரூபாயாகச் சரிந்து 2 வருட சரிவைப் பதிவு செய்துள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ் போலவே கூகுள், மைக்ரோசாப்ட்.. கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது..!
SpiceJet shares fall 2-year low after DGCA ordered to cut flight operations by 50 percent
SpiceJet shares hit 2-year low after airline’s flight operations cut by 50% SpiceJet: ஓரே அறிவிப்பு 2 வருட சரிவு.. என்ன நடந்தது.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!