எல்ஐசி என்றாலே பாதுகாப்பான இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கும் ஒரு நிறுவனம். இது ஏராளமான இன்சூரன்ஸ் திட்டங்களை மக்களுக்கு வாரி வழங்குகிறது.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டம் எல்ஐசி தன் சஞ்சய். இது பங்கு சந்தை அபாயம் இல்லாத, தனி நபர், சேமிப்பு காப்பீட்டு திட்டமாக உள்ளது.
மொத்தத்தில் பாலிசிதாரர்களுக்கு பாதுகாப்புடன் சேர்த்து சேமிப்பினையும் வழங்குகின்றது.
முதிர்வு காலத்தில் ரூ.54 லட்சம்.. தினசரி ரூ.238 போதும்.. அசத்தலான எல்ஐசி-ன் ஜீவன் லாப்!

உத்தரவாத வருமானம் தரும் திட்டம்
இந்த திட்டத்தில் பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் மரணமடைந்து விட்டால், அவரது குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. முதிர்வு காலத்தில் உத்தரவாதமான வருவாயினை வழங்கும் ஒரு திட்டமாகவும் உள்ளது. இந்த பாலிசியில் கடன் வசதியும் உண்டு. 3 வயது முதல் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும்.

இறப்பு பலன் எப்படி கிடைக்கும்?
இந்த பாலிசி 5 முதல் அதிகபட்சமாக 15 ஆண்டுகளுக்கு கிடைக்கிறது. இதற்காக பிரீமியத்தினை, பாலிசிதாரர் ஒரே தவணையாகவோ அல்லது தங்களுக்கு ஏற்ப செலுத்திக் கொள்ளலாம்.
இறப்பு பலனாக வழங்கப்படும் இழப்பீட்டு தொகையானது மொத்தமாகவோ அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும்.

4 விதமான ஆப்சன்கள்
இதில் ரைடர் பாலிசிகளும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியினை ஆப் லைன், ஆன்லைன் என இரண்டிலுமே பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பாலிசியானது பிரீமியம் செலுத்துதலை பொறுத்து 4 விதமாக உள்ளது. இதில்
ஆப்ஷன் ஏ. வழக்கமான / வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் திட்டத்தில் – நிலை வருமான நன்மைகளை பெறுதல்.
ஆப்சன் பி: வருமானத்தை அதிகரிக்கும் நன்மைகளை பெறுதல் – ஒருமுறை பிரீமியம் செலுத்த கூடிய பயன்களில் இரண்டு நன்மைகள் உள்ளது
ஆப்சன் சி: ஒற்றை பிரீமியம் முறை -நிலையான வருமானத்தை பெறுதல்
ஆப்சன் டி: நிலையான வருமான நன்மையுடன் கூடிய ஒற்றை பிரீமியம் முறை, இவற்றில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பும் அடங்கும்.

ரூ.22 லட்சம் எப்படி?
மேற்கண்ட இந்த 4 ஆப்சன்களில், முதல் இரண்டில் பாலிசிதாரர்கள் இறப்புக்கு குறைந்தபட்ச காப்பீட்டு தொகையாக 3.30 ரூபாய் பெறலாம். 3வது திட்டத்தில் 2.50 லட்சத்தினையும், 4வது திட்டத்தில் 22 லட்சம் ரூபாய் பெற முடியும்.
பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் இறந்து விட்டால் செலுத்த வேண்டிய பாலிசி சேமிப்பு தொகையானது, நிர்ணயிக்கப்பட்ட முதிர்வு தேதிக்கு முன் அவரின் இறப்பிற்கான காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.
LIC Dhan Sanjay Policy: How Rs 22 Lakh at Maturity is Possible?
LIC Dhan Sanjay Policy: How Rs 22 Lakh at Maturity is Possible?/எல்ஐசி தன் சஞ்சய் பாலிசி..ரூ.22 லட்சம் எப்படி சாத்தியம்.. யாருக்கு ஏற்றது?