சென்னை : செஸ் ஒலிம்பியாட் மூலமாக இந்தியாவையும் நமது கலாச்சாரத்தையும் பெருமைப்படுத்திய தமிழக அரசுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “செஸ் போட்டிக்காக பிரதமரின் பங்கு என்ன என்று கோடிட்டு முதல்வர் பேசினார். எனவே முதல்வரை பாராட்டியே ஆகவேண்டும்,’என்றார்.