மூன்று வார உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்கள் இனி கனவில் தான் நினைக்கணும் போல!

அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தால், அது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

வட்டி விகிதம் எதிர்பார்ப்பினை போல அதிகரித்தாலும், தங்கம் விலையானது குறையவில்லை. மாறாக மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

இது தற்போது மூன்று வார உச்சத்தில் காணப்படுகிறது. இந்த ஏற்றமானது இப்படியே தொடருமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? தற்போதைய விலை நிலவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி.. ஓலா நிறுவனத்தின் வேற லெவல் முயற்சி!

குறைந்த விலையில் வாங்கியிருக்கலாம்

குறைந்த விலையில் வாங்கியிருக்கலாம்

கடந்த இரண்டு அமர்வுகளாகவே தங்கம் விலையானது சற்று ஏற்றத்திலேயே இருந்து வருகின்றது. இது குறைந்த விலையில் முதலீட்டாளர்கள் வாங்கியிருப்பதால் ஏற்றம் கண்டு கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்ப்டுகிறது. அதோடு தொடர்ந்து பணவீக்கத்தினை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.

பொருளாதார மந்தம்

பொருளாதார மந்தம்

இது மேற்கோண்டு பணவீக்கத்தினை கட்டுப்படுத்தினாலும், பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம்,. ரெசசன் அச்சமும் எழுந்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. குறிப்பாக குறைந்த விலையில் தங்கத்தினை வாங்கி வைக்கவும் இது நல்ல வாய்ப்பாகவும் முதலீட்டாளர்கள் பார்த்த நிலையில், இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.

டாலர் மதிப்பு
 

டாலர் மதிப்பு

அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும் டாலரின் மதிப்பானது 106 என்ற லெவலிலேயே காணப்படுகின்றது. இது தொடர்ச்சியாக இரண்டு அமர்வுகளாகவே தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது. அதேபோல பத்திர சந்தையும் சற்று சரிவில் காணப்படும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் ஜிடிபி

அமெரிக்காவின் ஜிடிபி

பணவீக்கம் தொடந்து உச்சத்தில் இருந்து வரும் நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது காலாண்டு வளர்ச்சி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இது பொருளாதாரம் பற்றிய கவலைக்கு மத்தியில் மேற்கோண்டு வட்டி விகிதம் அதிகரித்திருப்பது, வளர்ச்சியில் மேலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 10.60 டாலர்கள் அதிகரித்து, 1760.90 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதேபோல வெள்ளி விலையும் 1.10% அதிகரித்து, 20.073 டாலராக காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே அதிகரித்துள்ள நிலையில், இது இன்னும் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராம், 172 ரூபாய் அதிகரித்து, 50,892 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 1164 ரூபாய் அதிகரித்து, 56,008 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை என இரண்டுமே ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்து, 4805 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து, 38,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்து, 5207 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,656 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,070 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 1.10 ரூபாய் அதிகரித்தே, 62.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 623 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1100 ரூபாய் அதிகரித்து, 62,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

 

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று – ரூ.48,050

மும்பை – ரூ.47,1003

டெல்லி – ரூ.47,250

பெங்களூர் – ரூ.47,150

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,050

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 29th June 2022: gold prices trade nearly in three week top

gold price on 29th June 2022: gold prices trade nearly in three week top/மூன்று வார உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்கள் இனி கனவில் தான் நினைக்கணும் போல!

Story first published: Friday, July 29, 2022, 10:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.