ஒட்டாவா:கனடாவில், விமான குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையான ரிபுடாமன் சிங் மாலிக்கை சுட்டுக் கொன்ற இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 1985ல் கனடாவில் இருந்து மும்பை சென்ற, ‘ஏர் இந்தியா’ விமானத்தில் குண்டு வெடித்தது. இதில், கனடாவைச் சேர்ந்த 268 பேர், 24 இந்தியர்கள் உட்பட, 329 பேர் பலியாகினர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிபுடாமன் சிங் மாலிக், அஜய் சிங் பக்ரி ஆகியோரின் குற்றம் நிரூபணமாகாததால், 2005ல் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன், பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் காரில் அமர்ந்திருந்த ரிபுடாமன் சிங் மாலிக்கை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த கொலை தொடர்பாக, டேனர்பாக்ஸ், ஜோஸ் லோபஸ் என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணைக்குப் பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்த போலீசாருக்கு, ரிபுடாமன் சிங் மாலிக் குடும்பத்தினர் நன்றி கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement