அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. முன்னதாக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதுந்

இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-வது பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கி இருக்கும் பிரதமர் மோடி பட்டமளிப்பு விழாவுக்கு காலை பத்து மணிக்கு புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் சொல்கிறார். இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
மோடி வருகையை ஒட்டி, அண்ணா பல்கலைக்கழக பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.