ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பையேற்று சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
எனினும், எந்த முடிவை எடுத்தாலும், அதனைக் கூட்டணியாகவே எடுக்கப் போவதாகவும் திரு.திகாம்பரம் கூறியிருக்கிறார்.
நாட்டில் சமூக பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அது பற்றி மலையகத்தை மையமாகக் கொண்ட ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடுகையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாட்டை பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் அறிவித்தார்.