சமூக வலைதளங்களில் சில
காங்கிரஸ்
தலைவர்கள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மகள் மீது குற்றம் சுமத்தினர். அதில் அவர்கள் கூறியிருப்பது ” ஸ்மிருதி இராணி மகள் கோவாவில் சொந்தமாக பார் நடத்தி வருகிறார் என்றும் அது பற்றி விளக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்”
இந்நிலையில் அதற்கு விளக்கம் அளித்த வழக்கறிஞர் ஐரஸ் ரோட்ரிகஸ், ” அந்த பார் அந்தோணி டி சோசா என்பவர் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது , ஆனால் அந்தோணி டிசோசா 2021ஆம் ஆண்டு இறந்துவிட்டார் எனவும், இறந்தவர் பெயரில் அந்த பார் நடத்தும் உரிமம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அந்தோணி டிசோசா மனைவி விளக்கமளித்துள்ளார்.இதுபற்றி கூறிய அவர் “இந்த நிறுவனத்தில் நானும் உரிமையாளராக உள்ளேன். கணவரின் இறப்புக்கு பின்னர் இந்தச் சொத்து சட்ட ரீதியாக எனக்கு வருகிறது. பார் நடத்தும் உரிமம் பெறும்போதும் இதனை நான் தெரிவித்துள்ளேன்” என்றார்.
இந்த வழக்கு தொடர்பாக மெர்லின் குடும்ப வழக்குரைஞர் பென்னி நாசரேத் கூறுகையில், ‘இந்த சிவில் சொத்து போர்த்துகீசியர்கள் சட்டத்தின்கீழ் வருகிறது. இந்த போர்த்துகீசியர்களின் சிவில் சட்டம் 1867இன் கீழ் வருவதால், இந்தச் சொத்து சட்ட ரீதியாக மெர்லினுக்கு வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்த பாருக்கும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.இதுகுறித்து விளக்கமளித்த ஸ்மிரிதி இரானி ” மக்களவை தொகுதியில் ராகுல்காந்தியை நான் தோற்கடித்து என் எண்ணம் காரணத்துக்காக என் மீதும் எனது 18 வயது மகள் மீதும் குற்றம் சுமத்துகின்றனர் ” என்று என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார்.