
பிகினி போட்டோக்களை வெளியிட்ட வேதிகா
தமிழில் முனி, பரதேசி, காஞ்சனா 3 என பல படங்களில் நடித்தவர் வேதிகா. தற்போது வினோதன், ஜங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தியிலும் பரவலாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபகாலமாக அதிரடி கவர்ச்சி நாயகியாக உருவெடுத்திருக்கும் வேதிகா சோசியல் மீடியாவில் கிளாமர் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள வேதிகா அங்குள்ள கடலுக்குள் சென்று பிகினி போட்டோ சூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது.