அமலாக்கத்துறையினரால் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கைது

மும்பை இன்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் வீட்டில் நடந்த சோதனையையொட்டி அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. மும்பையின் கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி மேற்கொண்ட குரு ஆஷிஸ் என்ற கட்டுமான நிறுவனம், குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.  இந்த வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி … Read more

கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய காங். எம்எல்ஏக்கள் ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை: தலா ரூ.10 கோடி, அமைச்சர் பதவி பேரம்

புதுடெல்லி: மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்க்கண்டில் ஜேஎம்எம்  -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கான பாஜ.வின் ‘ஆபரேஷன் தாமரை’ ஆரம்பித்து விட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் நடந்த கூட்டணி ஆட்சியை கடந்த மாதம் கவிழ்த்த பாஜ, சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் கூட்டணி அரசுக்கு அடுத்த குறியை வைத்துள்ளது. இந்த மாநிலத்தில்,  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) – காங்கிரஸ்  கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜேஎம்எம் தலைவரான ஹேமந்த் … Read more

ஆத்தூர்: கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த கார் – ஆடு மேய்த்த பெண் உயிரிழப்பு

ஆத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம், சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மனைவி சுதா (37). இவர், தனது ஆடுகளை சமத்துவபுரம் அருகில் உள்ள வரப்புகளில் மேய்ச்சலுக்காக விட்டுவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுதா நின்றிருந்த சாலையோரத்தில் … Read more

காரில் கட்டுக்கட்டான பணத்துடன் மேற்கு வங்கத்தில் சிக்கிய ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள்!

ஜார்க்கண்ட் மாநில எம்எல்ஏக்கள் 3 பேர் சென்ற காரில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய நிலையில், அவர்களை மேற்கு வங்காள காவல்துறை கைது செய்துள்ளது. ஜார்க்கண்டின் அண்டை மாநிலமான மேற்குவங்கத்தில் ராணிஹதி என்ற இடத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. காரில் இருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்களான இர்ஃபான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் பிக்சல் … Read more

கட்சியில் வாரிசுக்கு முக்கியத்துவம்தாவத் தயாராகும் எம்.பி.,க்கள்| Dinamalar

– புதுடில்லி நிருபர் – கட்சியில் வாரிசுக்கு முக்கியத்துவம் தரப்படுவதால், ஆந்திராவைச் சேர்ந்த மூன்று தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள், கட்சியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளனர்; பா.ஜ.,வில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடும் வீழ்ச்சிஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடும் வீழ்ச்சியை தொடர்ந்து சந்தித்து வருகிறது.வேறு சில மாநிலங்களில் உள்ளதுபோல், இங்கும் கட்சியில் வாரிசுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. சந்திரபாபு நாயுடுவின் மகன் நர … Read more

விஜய்யின் 'வாரிசு' அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய தகவல்

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக வரும் வாரிசு படத்தில் நடிக்கிறார் . இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷாம், பிரபு, யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் … Read more

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களின் கோரிக்கைக்கு அமைய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு…

ஜப்பானின் தய்சே நிறுவனத்திடம் இருந்து இலஞ்சம் கோரப்பட்டதாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது. விசாரணைக் குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி குசலா … Read more

மூதாட்டியின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு 15 சவரன் நகையை திருடிச் சென்ற நபர்களுக்கு வலைவீச்சு

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே, ஒயரால் மூதாட்டியின் கழுத்தை நெறித்து கொலை செய்து 15 சவரன் நகையை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். துட்டம்பட்டியில், விவசாய நிலத்தை பார்வையிட சென்ற சின்னம்மா என்ற அந்த மூதாட்டி மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பேரன் விஜயகுமார் அவரைத் தேடி சென்றுள்ளார். மோட்டர் ரூமில் மின்சார ஒயரால் கழுத்து நெறிக்கப்பட்டு சின்னம்மா பிணமாகக் கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மூதாட்டியை கடைசியாக சந்தித்த நபரை பிடித்து … Read more

புதுக்கோட்டை தேர் விபத்து | அரசு முழுமையான கவனத்துடன் செயல்பட வேண்டும்: விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: “தேர் விபத்து சம்பவம் மனதிற்கு மிகவும், வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அறநிலையத்துறை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை அனைவரும் முழுமையாக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் எல்லாம் பேசப்பட்டுள்ளது. எனவே வரும் காலத்தில் இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம்” என்று அவர் கூறினார். புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோயிலில் இன்று (ஜூலை31) நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். … Read more

நில மோசடி வழக்கு… சன்டே என்றும் பாராமல் சஞ்சய் ராவத் கைது?!

1,034 கோடி ரூபாய் நில மோசடி தொடர்பான வழக்கில், சிவசேனா மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத் துறை முன்பு சஞ்சய் ராவத் நேரில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கிடையே, மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத் துறை அவருக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் … Read more