‛மயோன் 2' உருவாகிறது

கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛மாயோன்'. கோயில் பின்னணியில் புதையல் வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதை படக்குழு கொண்டாடினர். இதையடுத்து ‛மாயோன் 2' உருவாகும் என அறிவித்துள்ளனர். இதற்கான போஸ்டரை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். முதல்பாகத்தில் தொடர்ந்த கூட்டணியே இரண்டாம் பாகத்திலும் தொடர உள்ளனர். முதல்பாகத்தில் கிருஷ்ணர் கோயில் பின்னணியில் படம் எடுத்தனர். இரண்டாம் பாகத்தில் முருகனை பின்னணியாக வைத்து படம் எடுக்க உள்ளனர். அதன்வெளிப்பாடாக படக்குழு … Read more

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட் மதுரை கிளை விசாரணை

தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கு தொடர்பாக அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,”கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற … Read more

#BigBreaking || அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ்….. சற்றுமுன் கடிதம் எழுதி கதையை முடித்த எடப்பாடி பழனிச்சாமி.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி சற்றுமுன், பொருளாளர் ஓபிஎஸ்க்கு எழுதியுள்ள கடிதத்தில், “அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் 29.06.2022- ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு. மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது.  கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை.  ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, … Read more

கோத்தகிரி அருகே 2 குட்டிகளை சுமந்தவாறு உலாவந்த கரடி.. வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கன்னிகாதேவி காலனி பகுதியில் 2 குட்டிகளை முதுகில் சுமந்து கொண்டு கரடி ஒன்று உலா வந்ததை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தலங்களில் பதிவிட்டுள்ளனர். கரடிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் வாகனங்களில் செல்ல அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ள பொதுமக்கள், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். Source link

ஜூலை 11-ல் நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்கும் கோரிக்கையை விசாரிக்க மறுப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜூலை 4-ம் தேதி விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஜூலை 11-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை கோரும் கோரிக்கையை இந்த அவமதிப்பு வழக்குடன் சேர்த்து விசாரிக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. முன்னதாக, இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி, சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் … Read more

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது – ககன்யான், சந்திராயன்-3 ஏவுதல் எப்போது?

சென்னை: பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டின் ‘டிஎஸ்-இஓ’ உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. விண்வெளி ஆய்வில் தனியார் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக 2019-ம் ஆண்டு என்எஸ்ஐஎல் என்ற அமைப்பும், 2020-ல் இன்ஸ்பேஸ் என்ற அமைப்பும் நிறுவப்பட்டன. அதன்படி என்எஸ்ஐஎல் அமைப்பு மூலம் சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 … Read more